பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும் ஆட்சியும் தோன்றின. அடிமைச் சமுதா யத்தைப் போலவே நிலப்பிரபுத்துவ சமுதாயமும் ஒரு விளாச்சிக் கட்டத்தையும், ஒரு வீழ்ச்சிக் கட்டத் தையும் வரலாற்றில் கடந்து சென்றது. நிலப் பிரபுத்துவத்தின் வளர்ச்சிகளின் கட்டத்திலேயே ஐரோப்பாவில் பல விவசாயிகளின் போர்கள் நடந்து வந்துள்ளன. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து விவ சாயிகளும், ஏழை மக்களும் போராடினர். பிரான் சில் 12. 13-ம் நூற்ருண்டுகளிலும், பொகிமியாவில் 15-ம் நூற்ருண்டிலும் விவசாயிகள் தீவிரமாகப் போராடினர். ஆயினும் இப்போர்களில் விவசாயி கள் தோற்றுப் போயினர். ஏனெனில், விவசாயிகள் ஒரு நல்ல அரசன் வேண்டுமென்றே போராடினர் கள். கொடுங்கோன்மையை எதிர்த்து, செங்கோன் மைக்காகத் தங்கள்மீது சுமத்தப்பட்ட நிலப்பிரபுத் துவ அடக்குமுறையை ஒழிக்க வேண்டுமென்று போராடிஞர்கள். சீனுவில் போராடிய விவசாயிகள் தனி அரசுகளே நிறுவியபொழுது அவை நிலப்பிரபுத் துவ கொடுங்கோன்மை அரசுகளாகவே மாறி விட் டன. இத்தாலியில் விவசாயிகளின் புரடசியால் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை ஒழிக்கப்பட்ட பின் வியாபாரிகளது ஆட்சி நிறுவப்பட்டது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் சமுதாயத் தின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ற வாறு இருந்தவரைக்கும் விவசாயிகளின் புரட்சிகள் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க முடியவில்லை. முதலாளித்துவ உற்பத்திமுறை தலை தூக்கிய பின்னர்தான் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை பலவீனமடையத் தொடங்கியது. முதலாளித்துவ உற்பத்தி சக்திகள், நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவு களோடு முரண்பட்டன. புதிய் சமுதாய சக்தி களான முதலாளித்துவ வர்க்கமும், பாட்டாளி 72