பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

w 9. அரசு பற்றிய மார்க் nயக் கொள்கை அரசு என்ற பிரச்சினையை மார்க்ேையக் கண் ணுேட்டத்தில் புரிந்து கொள்வதற்கு எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற் நின் தோற்றம்’ என்ற நூலேப் படிக்க வேண்டும். அரசின் தோற்றத்தை, சமுதாய வளர்ச்சியின் வரலாற்றுப் போக்கில் எங்கெல்ஸ் விளக்குகிரு.ர். அதன் பின்னர் வர்க்க சமுதாயங்கள் தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் அமைப்பையும், பாத்தி ரத்தையும் லெனின் தமது, அரசு', 'அரசும் புரட்சி யும் என்ற நூல்களில் விளக்குகிருர். இந்நூல்களின் கருத்தமைப்பை விளக்குவதே இப் பகு தி யி ன் நோக்கமாகும். அரசு மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கிறது என்று சிலர் நம்புகிருர்கள். நமது புராணங்கள்கூட இக் கருத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை. இந்திய தர்ம சாஸ்திரங்களின் அரசும், அரசனது ஆட்சியும் எவ்வாறு ஏற்பட்ட என்பதை விளக்க சில கதைகளை கற்பித்திருக்கின் றன. 'மக்கள் வாழ்க்கையில் பெருங் குழப்பங்களும், கலகங்களும் தோன்றி மனித இனம் அழிந்துவிடும் நிலையில் இருந்தபோது. சில பெரியவர்கள் அறிவாற் றலும், உடல் வலிமையும், ஆயுதப் பயிற்சியும் உள்ள ஒரு இளைஞனே அணுகி, நீ ஒரு இளைஞர் கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு எங்களிடையே ஒழுங்கை ஏற்படுத்து. அந்நியர்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்று. எங்களுக்கு சமுதாயப் பணி களைப் பகிர்ந்து கொடு. நாங்கள் உழைத்து, தானி யங்களையும், கனிகளை விளைவித்து உனக்கு ஒரு பங்கு தருகிருேம். அழகான பெண்களை உனக்குக் கொடுக் శ్లో கிருேம். உன் ஆணைப்படி நாங்கள் நடக்கிருேம். 87