பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைக்காதவன், உடைமையாளன், உடைமை யற்றவன், ஆண்டான், அடிமையென்ற வர்க்க வேறுபாடுகள் இருந்ததில்லை. அக்காலத்தில் அரசு என்ற அமைப்பும் இருந்ததில்லை. முறையாக வன் முறையை பெரும் பகுதி மக்களின்மீது செலுத்தும் விசேஷக் கருவியான அரசு இருந்ததில்லை. மக்கள் சிறு சிறு குலங்களாக வாழ்ந்தார்கள். ரகளுடைய வாழ்க்கை காட்டுமிராண்டி ழ்க்கை நிலையை ஒத்திருந்தது. அக் காலத்தில் அரசு என்ற அமைப்பு தோன்றவில்லை. அக்குலக் குழு சமுதாயங்களில் வழக்கம், மரபு இவற்றைப் பின்பற்றி மக்கள் ஒழுக்கங்களே அமைத்துக்கொண் டார்கள். பண்டைய ஒழுக்கங்களையும் வழக்கங். களையும் அறிந்திருந்த குலத் தலைவர்கள் செல்வாக் கும், மதிப்பும், அதிகாரமும் பெற்றிருந்தார்கள். இந்த அதிகாரம் சில சமுதாயங்களில் பெண்களுக் கும், வேறு சில சமுதாயங்களில் ஆண்களுக்கும் இருந்தது. மக்களின் ஒரு பிரிவினரை மற்ருெரு பிரினர் அடக்கியாள்வதற்காக ஒரு வன்முறை யந்திரம் தோன்றவில்லை. ஒரு பிரிவினரின் நோக்கங் களே பலவந்தமாக நிறைவேற்றிக் கொள்வதற்குரிய சாதனங்களான ஆயுதம் தாங்கிய படைப் பிரிவு கள், சிறைச்சாலைகள் முதலியவை அக் காலத்தில் இருந்ததில்லை. அரசு என்ற யந்திரத்தின் இன்றைய உருவம் இவைதாம் என்பதை நாம் அறிவோம். மக்களில் ஒரு சிறு பிரிவினர் பெரும் பிரிவினரை அடக்கி ஆண்டு தமது லாபத்திற்காக உழைப்ப தற்கு கட்டாயப்படுத்தும் நிலை ஒரு சமுதாயத்தில் தோன்றும்பொழுதுதான் சிறைச்சாலைகள், படை கள் முதலிய பலவந்த ஆயுதங்கள் கொண்ட அரசு தோன்றுகிறது. ஒரு வகுப்பினர் மற்றுெரு வ பினரின் உழைப்பை நிரந்தரமாக அபகரித்து 89