பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ள முடிகிற நிலைமை ஒரு சமுதாயத்தில் தோன்றும்பொழுது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் விசேஷ யந்திரமாகத் தோன்றியது. இந்த நிலைமை முதன் முதலில் ஆடிமைச் சமுதாயம் தோன்றுகிற ப்ொழுது உண்டாகிறது. உலகத்தின் எல்லாப் பகுதிகளில் உள்ள மக்களும் இந்தக் கட்டத்தை தமது வரலாற்றில் கடந்து வந்திருக் கின்றனர். ஆண்டைகளும், அடிமைகளும் சமுதாய வரலாற்றில் முதன் முதலில் தோன்றிய வர்க்கங்கள் ஆவர். ஆண்டைகள் என்னும் பிரிவினர் நிலத்தை யும், கருவிகளையும், அடிமைகளான மக்களேயும்கூட தம் உடைமையாக்கிக் கொண்டார்கள். ஆண்டை களின் லாபத்திற்காக உழைத்து உழைப்பை வழங்கியவர்களே அடிமைகள் எனப்பட்டனர். பெரும்பாலான நாடுகளில் அடிமை முறை தன் வளர்ச்சிப் போக்கில் பண்ணை அடிமை முறையாக வளர்ந்தது. இங்கே நிலப்பிரபுக்களும் பண்ணை அடிமைகளும் பிரதான வர்க்கங்களாக அமைந் தனர். மக்களுக்கிடையே நிலவிய உறவில் நிலைமை மாறியது. அடிமைச் சமுதாயத்தில் அடிமைகள் சட்ட பூர்வமாக ஆண்டைகளின் உடைமையாக வேக் கருதப்பட்டனர். நிலப்பிரபுத்துவ சமுதாயத் ல் பண்னேக் குடியானவர்கள் நிலப்பிரபுவின் உடைமையாகக் கருதப்படவில்லை. ஆயினும் அவர் கள் நீல உடைமையாளர்களது ஒழுக்க முறைகளுக் கும், சட்டங்களுக்கும் உட்பட்டே இருந்தனர், நில உடைமை சமுதாயத்தில் வாணிபம் வளர்ச்சியுற்று, உலகச் சந்தை தோன்றியது. வாணிப வளர்ச்சி யினுல் ஒரு புது வர்க்கம் தோன்றியது. இதுதான் முதலாளித்துவ வர்க்கம். பண்ட உற்பத்தி முறையி விதந்து பண்ட மாற்றுத்திலிருந்து பண்த்தின் அதிகாரம் தோன்றியது. இதிலிருந்து மூலதனத்தின் ே தி 90