பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிக்கம் வளர்ந்தது. இந்த வர்க்கம் தனது வளர்ச் சிக்கு தடையாக இருந்த நிலப்பிரபுத்துவ முறையை எதிர்த்து புரட்சிகளை நடத்தியது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவ முறை அழிக்கப்பட்டது, முதலாளித்துவ வர்க்கம் ஆட்சி பைக் கைப்பற்றியது. வர்க்கப் பிரிவினை முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற உருவத் திற்கு மாறியது. எல்லாமுதலாளித்துவ நாடுகளிலும் மூலதன உடைமையாளர்கள் மக்களில் மிகச் சிறு பான்மையினராகவே இருக்கிருர்கள். நில உடைமை யாளர்களும் அவ்வாறே. மக்களுடைய உழைப்பு முழுவதும் இவர்கள் வசத்தில் இருக்கிறது. உழைப் பாளி மக்களனைவரையும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் உழைக்கும் மிக்களைச் சுரண்டுகிருர்கள். அவர்களை ஒடுக்கி வைக்க முயலு: கிருர்கள். இந்த சமுதாய வளர்ச்சிப் போக்கின் பின்னணி யில் அரசின் தோற்றத்தைக் காண வேண்டும். முதல் வர்க்க சமுதாயத்தின் தோற்றத்தோடு அதுவும் தோன்றி விடுகிறது. அது தோன்றிய காலத்தி லிருந்தே சமுதாயத்திலிருந்து தனித்துப் பிரிந்து ஒரு வன்முறைக் கருவியாக இருந்து வந்திருக்கிறது. இவ்வரசின் அங்கமாக இருக்கும் ஊழியர்கள் அடக்கி ஆளுகிற பணியைத்தான் செய்கிரு.ர்கள். ஆள்பவர்கள், ஆளப்படுபவர்கள் என்ற பிரிவினை வர்க்கப் பிரிவினைக்கு ஏற்றபடி தோன்றுகிறது. ஆளுபவர்கள், சமுதாயத்திற்கு மேற்பட்டவராகி அரசின் உறுப்புகளாக அமைகின்றனர். இந்த ஆளும் பிரிவினர் பலம் கொண்ட ஒரு கருவியை மக்களே ஒடுக்குவதற்காகப் படைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்றபடி இக்கருவி குண்பித்த அல்லது வேல் ஏந்திய படையாகவோ, வாள் அல்லது 9 !