பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 மார்ட்டின் லூதரின்

எதிர்த்து மார்ட்டின் கூறும் 95 நியாயங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை ஒட்டி ஆணியறைந்து வைத்தார்.

மாரிட்டின் லூதர் இவ்வாறு செய்த வீரதீரச் செயல் ஜேர்மன் நாடெங்கும் பரவிவிட்டது. அதனால் கல்வி யாளர்களிடம், மாணவர்களிடம், வேதகுருமார்களிடம், பொது மக்களிடம், கிறித்துவமக்களிடம் பெரும் பரபரப்பு எழுந்தது.

ஜெர்மன் நாட்டிலே ஏற்பட்ட இந்த பரபரப்பு: அதிர்ச்சி, வியப்பு, ரோமாபுரி திருச்சபையை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. ரோமாபுரி எங்கும் மார்ட்டின் சவாலைப் பற்றியே பேச்சு பரபரப்புடன் ப்ேசப்பட்டது. போப்பை எதிர்த்துச் சவாலா? போப்புக்கு எதிர்வாக்கா? எவ்வளவு தைரியமான செயல்? யார் அந்தபுண்ணியவான் மார்ட்டின்? என்ற பேச்சு மக்களிடையே எழுந்தது!

ரோமாபுரி மட்டுமல்ல; ஐரோப்பிய நாடுகள் பலவற் றிலும், மார்ட்டின் லூதரின் ஆண்மை மிக்க அறிவுவாதப் போர் என்ற காட்டுத்தீ பரவிவிட்டது. எல்லா நாடுகளும் விட்டன்பர்க் தேவாலயத்தின் வடபுறத்துக் கதவைப் ஆற்றியே பேச ஆரம்பித்தன! மக்களும் சாரி சாரியாகத் திரண்டு அந்த 95 நியாயக்குறிப்புக்களைப் படித்தார்கன்.

அந்த 95 நியாயக் குறிப்புக்களை யாரோ ஒர் அனாம தேயப் பேர்வழி எழுதினார் என்ற கோழைத்தன ஈனம் தனக்கு வந்து சேர்ந்து விடக் கூடாது என்று எண்ணிய மார்ட்டின் லூதர் அந்த ஆணியடித்து ஒட்டிய அறிக்கை யின் கீழே: -

"இந்த நியாயங்களை வேத சாஸ்திர பண்டிதஞானி மார்ட்டின் லூதராகிய நான் எழுதியுள்ளேன். இவற்றைப் பற்றிப் பகிரங்கமாக வாதாட அல்லது தர்க்கம் செய்ய விரும்புவோர் என்னிடம் நேரில் வந்து வாதாடலாம்.