பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மார்ட்டின் லுரதகின்

அவர் நேராகவே கோப் பாண்டவரிடம் சென்றார். இந்த வழக்குப் பற்றி இருவருக்கும் கலந்துரையாடல் நடந் தது. முடிவாக இளவரசர் கூறும்போது, இந்த வழக்கு ரோமாபுரியில் அல்ல; ஜெர்மனி நாட்டிலேதான்் நடக்க வேண்டும்; விசாரிக்கப்பட வேண்டும்' என்று போப்பிடம் மன்றாடினார்.

இளவரசர் எடுத்த முயற்சியின் விளைவாக, போப் தன் சார்பில் கயத்தான்் aேjetan என்னும் ஒரு பிரதிநிதியை அனுப்பி, மார்ட்டின் லூதரை ஆக்ஸ்பர்க் என்னும் இடத் தில் விசாரணை செய்யுமாறு ஓர் ஒழுங்குக் கட்டளையைப் பிறப்பித்தார்.

மார்ட்டின் லூதர் எதற்கும். அஞ்சாமல் போப் கட்ட ளையை ஏற்றார்: அக்டோபர் மாதம் ஏழாம் தேதி லுரதசி கால் நடையாகவே நடந்து ஆக்ஸ்பர்க் என்ற இடத்திற்கு வந்தார்.

போப் பிரதிநிதியான கயத்தான்், தனது புகழ் பெற்ற வேவுகாரன் உர்பன் என்பவனை அழைத்து, மார்ட்டின் ஆாதரிடம் அனுப்பி, அவனது முழுத் திறனையும், அறிவை யும், சாதுரிய தந்திரங்களையும் காட்டி, லூதரை எப்படி யாவது அவர் விடுத்துள்ள அறிக்கையை மறுதலிக்குமாறு செய்யச் சொன்னான். w

உர்பன் என்ற வேவுகாரன் மார்ட்டின் லூதரைச் சந்தித்தான்்; அன்பாக வாதாடினான்: ஆசைகாட்டி வாதாடினான்; நயவஞ்சகமாகத் தாக்கினான்; இறுதியாக அச்சமூட்டிப் பேசினான்; மறுதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தையைக் கூறினால் போதும் என்று கெஞ்சினான்.

விசுவாச வீரச் சிங்கமாகிய மார்ட்டின் லூதர், അതു டைய அச்சுறுத்தலுக்கோ, அன்புக்கோ, ஆசைச் சொற்