பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 87

உருவானது ஜெர்மனி நாடு அதனால் மிகவும் துயரம் கொண்டு அைைர நாலாப் பக்கங்களிலும் தேடிக் கொண்டே இருந்தது;

ஆல் பிரெக்ட்டுரர் என்ற ஒரு கலைஞர், லூதர் எங்கே என்று தேடினார்! மற்ற ஆட்களையும் அனுப்பித் தேடவைத்தார். எங்கு தேடியும் லூதர் கிடைக்காமல் போகவே, போப் ஆட்கள் அவரை போகும் வழியில் கொலை செய்து விட்டார்கள் என்று கண்கலங்கி, ஒரு செய்தியைப் பரப்பிவிட்டார்.

துக்கம் தரும் அந்தத் துன்பச் செய்தியை அவர் பரப்பியதோடு நில்லாமல், பக்தர்களே உண்மைக்காகப் போராடிய மாவீரன் மார்ட்டின் லூ தரை யாரோ கொலை செய்துவிட்டார்கள். அவர் இறதது போனதைப் பற்றி நாம் கண்ணி சிந்துவோம். கர்த்தர் வேறு ஒரு பரிசுத்த விசுவாசியை அனுப்புமாறு ஆண்டவரை வேண்டுவோம் 'வாருங்கள்' என்று வருத்தப்பட்டார்.

வொர்ம்ஸ் நகரில் கூடிய அரச சபை தீர்மானத்தின் படி மார்ட்டின் லூதர் ரோமாபுரி திருச்சபைக் கு ம. கிறித் துவ சமூகத்திற்கும் புறம்பானவர் என்று கூறப்பட்டு விட்டதால், வோறொரு கவிசேஷ கிறிஸ்துவ திருச் சபையை உருவாக்குவதே உலகுக்கு நல்லது என்று லூதர் உணர்ந்தார்.

அதற்கான ஆக்கப் பணிகளை ஆற்றுவதிலே தீவிரம் காட்டினார். வர்ட்புர்க் கோட்டையிலே இருந்தவாறே சுவிசேஷ திருச்சபைக்கு உயிர் அச்சானியாக, புதிய ஏற் பாடு என்ற வேதாகமத்தை ஜெர்மன் மொழியிலே ஆக்கம் செய்தார்!

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் கிறித்துவ வேதாகம நூலை அவரவர் தாய் மொழியிலே வாசித்தால்தான்்