பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

மார்ட்டின் லூதர்


மக்களைத் தன் பாப மன்னிப்புச் சீட்டின் மூலம் பரலோகத்துக்கு அனுப்ப முடியுமென்று ஏமாற்றி, ஏழைகளின் காசை ஈவிரக்கமில்லாமல் சுரண்டிய ரோமாபுரி வல்லூறுகள் அகில ஐரோப்பாவையும் சுற்றித் திரிந்துகொண்டிருந்த நேரம்.

ஒரு சில நேரங்களில் மன்னர்களைக் கூட எதிர்த்துவிடலாம், ஆனால் இந்த மதத்தலைவர்களை எதிர்ப்பதென்பது தீத்துணைத் தழுவுவதற்கொப்பாகும் என்று மக்கள் நடு நடுங்கி வாழ்ந்த காலம்.

போப்பின் நாவசைந்தால் சிரமற்று விழும், சீறினால் சமுதாயமே சாம்பலாகும், மன்னனை மனிதனாக்குவதும் அந்த மதத் தலைவர்களுக்கு ஜெப மாலையின் மணியையுருட்டுவதைப் போலத்தான். அவர்கள் செய்த சகிக்க முடியாக கொடுமைகளுக்கெல்லாம் தேவ கட்டளை என்ற முத்திரை.

அறிவுக்கே எட்டாத ஒன்றை, "ஆண்டவன் கட்டளையால் செய்தே முடித்துவிட்டோம்," என்று ஆர்ப்பரித்துத் திரிந்துகொண்டிருந்த நேரம். அதை ஆம், ஆம்! என்று சொல்லிக் தலையசைக்க கூலிகள், வெண்சாமரம் வீசிகள், விருதுகள் பிடிப்போர் அனேகர்.

ஒருவன் தன் குற்றங்களை யுணர்ந்து மனம் கசிந்து கண்ணீரால் தன் உடலைக் கழுவினலும் போப்பின் புண்ணிய நீராலன்றிப் புனிதவனாக மாட்டான் என்ற புரளியைப் பரப்பிக்கொண்-