பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

7



செத்த வடமொழிக்குச் சர்க்காரும் சனாதனமும் இங்கே சலுகை காட்டுவதைப்போல, ஜர்மனியில் ஜர்மன் மொழியிருக்க லத்தீன் மொழி ஆட்சி பீடமேறிச்செலுத்திய அதிகாரத்தைச் செல்லரிக்கச் செய்த ஓர் சுதந்திர வீரன் பிறந்த நாள்.

அகண்ட சாம்ராஜ்யங்களைக் கட்டியாள, அரியாசனத்தை வீரர்களின் ரத்தாபிஷேகத்தால் தூய்மைப்படுத்த, அதை அறியாத மன்னர்கள் போப்பின் தண்ணீரால் கழுவி, அவர் பாதத்தில் விழுந்து கண்டனிட்ட தார்வேந்தர்களுக்கு ஓர் அபாயச்சங்காக அமைந்த நாள் அந்த நாள்.

ஆதிக்கம்

"ஜெர்மன் நாடு ஜெர்மானியர்களுக்கே" என்ற ஓசை, கிணற்றிலிருந்து பேசிக்கொண்டே மேலே ஏறுபவன் ஓசைபோல், முதலில் மெதுவாக கேட்க ஆரம்பித்து, வரவர வானவெளியிலே வட்டமிட்டு ஜர்மன் எல்லை எங்குமே கேட்க ஆரம்பித்தது. அதுவரையிலும், நம்மை யார் ஆளுகின்றார்கள் என்று பெருவாரியான ஜர்மன் மக்களுக்குத் தெரியாது. ஆள்பவன் ஸ்பெயின் நாட்டு மன்னன். மதகுருவோ, இத்தாலியத் தலைநகராம் ரோமாபுரியின் போப். மொழியோ லத்தின். அந்த நாட்டிலே பிறந்த தாயகத்தாருக்கு ஒருவித உரிமையுமில்லை. அதுவரையிலும் விவிலியம் (Bible) கூட ஜர்மன் மொழியில் எழுதப்படவில்லை. அது, அன்றைய ஜெர்மனிக்கு சகிக்க முடியாத அவமான