பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

19


மன்னிப்புச் சீட்டென்றால் நெருப்பென்றும், உங்கள் பாவச் சருகுகளை அந்தத் தீ எரித்துவிடுமென்று எண்ணுகின்றீர்கள், அறியாமை! உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளுகின்றீர்கள். உங்களுக்கான சவக் குழியை உங்கள் சொந்தக் கையால் வெட்டிக் கொள்ளுகின்றீர்கள். அவசரத்தால் அறிவை இழந்துவிட வேண்டாம். பயத்தால் பாதையை விட்டு விலக வேண்டாம். அறியாமையால் அக்ரமக்காரர்களை ஒன்றுக்கு ஆயிரமாக உற்பத்தி செய்ய வேண்டாம். வாழப் பிறந்தவர்களை சாக மருந்துண்ணாதீர்கள்.

அறைகூவல்

பிறகு, 95 காரணங்களைக் காட்டினான், எழுதினான், தாக்கினான், கத்தோலிக்க மார்க்கத்தைத் திணற அடித்தான். மக்கள் இவன் பக்கம் கூடினர். விழித்தனர். ஆரவாரித்தனர். அன்று பிறந்தது ப்ராடெஸ்டெண்டு (Protostant) மதம்.

விண்டன் பர்க்கிலுள்ள கோயிலி (Church of all Saints)-ன் கதவில், ஜான்டெட்சலுக்கு ஒரு அறைகூவலை விடுத்தான். அதாவது, போப்பின் கைப்பாவையே! வெளியே வா! கபடசன்யாசியே! வா வெளியே! உன்பாப மன்னிப்புச் சிட்டுத் தவறானது. மோசடியும் கொள்ளையும் சேர்ந்தது. பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ வாதிடலாம் வா வெளியே! என்று பகிரங்கமாக ஒரு அறிக்கையைக் கதவில் ஒட்டினான்.