பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

21


என்று வாங்கிப் பார்க்கிறான், பசும் பொன்னால் செய்த ரோஜா, பிரமித்துப் போனான். என்னால் என்ன ஆகும் என்று நினைத்து பொன்னாலான ரோஜாவைப் பரிசளிக்கிறார் உங்கள் போப். நான் மிக மிக எளியவன், போப் எங்கே, நான் எங்கே, அவர் ஆல்ப்ஸ்மலை, நான் அதன் அடிவாரம். அவர் பஞ்சபூத சாட்சியாகக் கொடுத்ததல்ல, வஞ்சகந்தீர்க்க எனக்கவர் அளித்த லஞ்சம். என் ஒருவன் உயிரை மாத்திரமல்ல, எனக்குப் பின்னால் இருக்கும் எண்ணற்றவரின் உயிரை எல்லாம் இந்த ஒரு தங்க ரோஜாவுக்கு விலை மதிக்கிறார் போப். தங்க ரோஜா, உண்மை ரோஜாவாக இருந்தாலும் மனம் இருக்கும், இதில் என்ன இருக்கு. உண்மை ரோஜாவிலாகிலும் வண்டுகள் மொய்க்கும். தரித்திரர்கள், திருடர்கள், வாழ வழியற்றோர், வறுமையில் வாடுவோர், தவிர வேறுயார் இதை சீந்துவார்கள். என்னையும் என் வருங்கால சந்ததிகளையும் நாட்டையும் ஏமாற்ற முடியுமென்றா நினைக்கின்றார் போப்.

"இதைக் கண்டவுடன் கட்டுப்பாடில்லாமல் சிரிக்கின்றேன். எனக்கும் ஒரு பாப மன்னிப்புச் சீட்டனுப்பாமல், இந்தக் தங்கரோஜாவை அனுப்பினாரே. அது ஒன்றே, மற்ற மனிதர்களிலிருந்து என்னை வேறாகப் பிரிக்கிறது என்பது மட்டிலும் உண்மை. ஏதோ ஓர் நாகரிகச் சதி செய்கிறார் போப். அவர் வீற்றிருக்கும் ரோமாபுரியின் மகுடத்தையே எனக்களிப்பதானாலும் என் எண்-