பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மார்ட்டின் லூதர்


அழைத்துக்கொண்டு அரச பலிபீடம் நோக்கிச் செல்கின்றான், தடுக்கின்றார்கள் நண்பர்கள், அதிலும் குறிப்பாகக் தன் ஆருயிர்த் தோழன் சாக்ஸன் நாட்டுச் சீமான் பிரடரிக்.

ராணுவ நடை

'பலி பீடம் நோக்கிச் செல்கிறது பரிதாபத்துக்குரிய ஆடு' என்கின்றனர் பச்சாதாப உள்ளத்தினர். கண்களை நீர்த் தேக்கமாக்கினர் கவலை கொண்டோர். "எறித்தூணைத் தழுவப் போகின்றான் ஏமாளி" என்றனர் ஏதுமறியா மக்கள். "விஷக் கடலில் குதிக்கப் போகின்றான்," என்றனர் வயோதிகர்கள். இவன் மதக் கொடுமைகளை எதிர்த்து மன்னன் மன்றத்தில் வழக்காடப் போகவில்லை, உயிரை வெகுமதியாகக் தரப்போகின்றான் கபோதி," பாவம் யார் பெற்ற பிள்ளேயோ! என்றனர் அன்புள்ளம் படைத்தோர். "திரும்பி உயிரோடு வரவேமாட்டான் உடலையும் ஊராருக்குக் காட்டுவார்களோ இல்லையோ, இது ஊர் மக்கள் ஒரு முகமாகக் கொடுத்த தீர்ப்பு

பாராளுமன்றத்தின் தலைவாயில் வரையிலும் தடுக்கின்றான் நண்பன் பிரடரிக். கண்ணீரும் கம்பலையுமாக வாய்குளறிக் கத்துகின்றான். நண்பனை இழந்துவிட்டதாகவே முடிவுகட்டிவிட்டான். பூனை வாயில் சிக்கிய கிளி பிழைக்கப் போவதில்லை, யானை காலடியில் சிக்கிய பூனை உயிர் வாழாது. இழந்துவிட்டோம் அரிய நண்பனை. வாதப் போரில்