பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதற்கு இடையில் மத குருமார்களுக்குள் சாதகமாக அடித்துக்கொண்டிருந்த காற்று சீர்திருத்தவாதிகள் பக்கம் அடிக்க ஆரம்பித்தது. சீர்திருத்தவாதிகள் கை ஓங்கவும், மதவாதிகள் கை தாழவுமான நிலை ஏற்பட்டதற்குக் காரணம், மதத்துக்குக் கவசம்போல் விளங்கிய ஐந்தாம் சார்லெஸ் நாட்டைவிட்டு ஓடிவிட்டான் என்ற செய்திதான்.

எப்படி உள் நாட்டிலே இருந்த மக்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஆயுதங்களை ஏந்தி சண்டையிட, ஆரம்பித்தார்களோ, அதைப்போலவே சேர்லெஸ் மன்னன் ஓடிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு. ஒரு சாரார் வெற்றி கொண்டாடவும், மற்றோர் சாரார் துக்கம் கொண்டாடவுமானர்கள்.

மறைவு

தையறிந்த நண்பன் பிரடரிக் இந்த சந்தோஷச் செய்தியை லூதருக்கு அறிவிக்க வருகின்றான். ஆனால் அதற்குள் லூதர் தன் நீலக் கண்களை மூடிக் கடைசி வணக்கத்தை நாட்டுக்குக் செலுத்தி மீளாத்தூக்கத்திலாழ்ந்து விட்டான். இப்போது இவனுக்கு வயது 72. நண்பன் துக்கித்தான், எனினும், செடியில் மலர்ந்த மலர் கொய்வாரின்றி செடியினடியிலேயே வீழ்ந்து வாடி விடுவதைப் போன்ற இந்த வாழ்க்கை என்ற தத்துவம் நன்றா யுணர்ந்தவனாகையால் கொஞ்சம் கொஞ்சமாக மன ஆறுதல் கொண்டான். மக்கள் கண்ணீர் வடித்த-