பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மாலை பூண்ட மலர்

வளர்ச்சி அடைகின்றது. காமேசுவரனைத் தன்வயப்படுத்தி நிற்கும் பெண்மை யெழிலுடையவள் அன்ன. அதையே இவ்வாறு பாடினர், அபிராமிபட்டர். -

உலகத்தில் மனிதனுக்கு மனம் உள்ளவரையில் ஆசை யும் இருக்கும். ஒரு பொருளின்மேல் ஆசைப்பட்டு நுகர்ந்தவன் மறுபடியும் அதற்கு ஆசைப்படமாட்டான் என்று சொல்வதற்கில்லை. மீண்டும் மீண்டும் அதனை அநுபவித்துக்கொண்டே இரு க்க வேண் டு ம் என்று விரும்புவான். மண்ணென்றும் பொன்னென்றும் பெண் ணென்றும் ஆசை வைத்து அவற்ருல் வரும் போகத்தை நுகர விரும்புகிருன். நியாயமான முறையில் போகத்தை அநுபவிப்பதில் தவறு இல்லை. அதுவே முடிந்த முடிபாக எண்ணி மற்றவற்றை எண்ணுமல் இருப்பதுதான் தவறு. இந்த உலகத்தில் நாம் போகத்தைப் பெறுகிருேம். இதை விடச் சிறந்த போகத்தைத் தேவலோகத்தில் பெறலாம். மற்ற தேவர்கள் அடையும் போகத்தைவிடப் பன்மடங்கு சிறந்தது தேவ மன்னனுகிய இந்திரன் அநுபவிக்கும் போகம். இந்திர போகந்தான் போகத்தின் தலை எல்லை. பதவி, அதிகாரம், வரம் கொடுக்கும் தகுதி, இன்பம் நுகரும் வாய்ப்பு, பலவகைச் செல்வங்களைப் பெற்றிருத்தல், யாருக்கும் அஞ்சாத நிலைமை, முப்பத்து முக்கோடி தேவர் களுக்குத் தலைவகை நிற்கும் பெருமை, உலகத்துக்கு வேண்டியதை அருளும் ஆற்றல், தவத்தினர் செய்யும் தவத்துக்குத் தடைபோடும் விறல் இப்படிப் பலபல சிறப்புக்களையுடையவன் இந்திரன். -

அம்பிகை முத்தி தருவாள் என்பது முக்காலும் உண்மை. அவள் போகத்தையும் தருவாள். இந்த உலகத்தில் இன்புற்று வாழும் வாழ்வை அவள் தருவாள் என்பது ஒரு பெருமை அன்று; போகத்தின் தலையெல்லை யாகிய இந்திரனுடைய பதவியையே வழங்குவாள். தன்னை