பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபெருமான் பெற்ற தோல்வி 99

விரும்பும் அன்பர்கள் வேண்டுமென்ருல் அமராவதியை ஆளும் உரிமையை அருள்வாள். பத்து ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் யார் யாருக்கோ சலாம் போடுகிருேமே! இந்த அவலநிலை வேண்டாம். போகமெல்லாம் ஒருங்கே தருபவள் அம்பிகை. பரமசிவனுக்கே போகம் அருளும் எம்பெருமாட்டி அவள். அவளைப் பணிந்தால் இந்திர போகத்தையே தந்து விடுவாள். நீங்கள் யார் யாரையோ போய் பணி கிறீர்களே! அமராவதிப் பட்டணத்தை ஆளவேண்டுமா? இந்திர பதவியை அடையவேண்டுமா? எல்லாப் போகங் களிலும் உயர்ந்த போகத்தைப் பெறவேண்டுமா? அவளைப் பணியுங்கள்!” என்று அபிராமி பட்டர் உபதேசம் செய்கிருர், -

பவளக் கொடியிற் பழுத்தசெவ் வாயும்

பணிமுறுவல் - - தவளத் திருநகை யும் துணை யாளங்கள்

சங்கரனைத் - துவளப் பொருது துடியிடை சாய்க்கும்.

துணைமுலையாள் அவ8ளப் பணிமின்கண் டிர்! அம ராவதி

ஆளுகைக்கே. . . .

[போகத்தை விரும்பி யார் யாரையோ கும்பிடும் மக்களே, எல்லாப் போகங்களிலும் சிறந்ததாகிய இந்திர போகத்தைப் பெற்றுத் தேவராஜாவாக இருந்து அமராவதியை ஆளும்பொருட்டுப் பவளக்கொடிபோலக் கனிந்த செவ்வாயும் குளிர்ச்சியையுடைய புன்னகை தோற்றும் வெண்மையான அழகிய பற்களும் தமக்குத் துணையாக இருக்க, எங்களுக்குச் சுவாமியாகிய சங்கரனைக் குழைந்து நெகிழும்படியாக மோதி, உடுக்கை போன்ற இடையைத் தளரச் செய்யும் இரண்டு தனங்களை உடைய