பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் குறைதான்

மழை அருமையாகப் பெய்யும் பகுதி அது. அங்கே மழை பெய்தது. வீட்டுக்குள் சமையல் செய்துக்கொண். டிருந்தாள் வீட்டுக்கு உடையவள். மழை பெய்வதை அறிந்து தன் மகனை அழைத்தாள். அந்த அறையில் அரிக்குஞ் சட்டி வைத்திருக்கிறேன். அதை முற்றத்தில் கொண்டுபோய், வை என்று கூறினுள். பையன் அப்படியே செய்தான். பாத்' திரம் சமீபத்தில் வாங்கிய புதுப்பாத்திரம்.

மழை இரண்டு மணி சடசடவென்று பெய்தது. அது நின்றவுடன் வீட்டுப் பெண்மணி தன் மகனே அழைத்துப் பாத்திரத்தை எடுத்துவரச் சொன்னுள். அவன் கொண்டு வந்தான். அவள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தபடி அதில் நீர் நிரம்பியிருக்கவில்லை; சிறிதளவு கூட் இல்லை. பாத்திரம் ஒட்டை இல்லாதது என்பது நினைவில் இருக்க வேண்டும். -

ஏன் பாத்திரத்தில் நீர் இல்லை மழை பெய்ததில் குறைவு இல்லை; பாத்திரத்திலும் குறைபாடு இல்லை. அப்படி யானுல் ஏன் அதில் நீர் இல்லை?

உண்மை இதுதான். பையன் தாய் சொன்னபடியே செய்தான். உள்ளே பாத்திரம் இருக்கிறது; முற்றத்தில் கொண்டுபோய் வை' என்ருள் தாய். உள்ளே பாத்திரத் தைக் கவிழ்த்து வைத்திருந்தாள் அன்னே. பையன் அதை அப்படியே கொண்டுவந்து முற்றத்தில் கவிழ்த்தே வைத்து விட்டான். நிமிர்த்து வைத்திருந்தாலல்லவா தண்ணிர். அதில் தேங்கும்? - -