பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மாலை பூண்ட மலர்

நாமும் நம் மனத்தை அப்படித்தான் வைத்திருக்கிருேம். உலக மாதாவாகிய அன்னை எப்போதும் அருள் மழை பெய்துகொண்டே இருக்கிருள். உலகத்தில் பெய்யும் மழை இன்ன காலத்தில்தான் பெய்யும், இன்ன இடத்தில்தான் பெய்யும் என்ற வரையறை உண்டு. அம்பிகையின் அருள் மழை இடைவிடாது பெய்து கொண்டே இருக்கிறது. அதைப் பெறவேண்டும் என்று ஏக்கம் பிடித்து மற்றவற்றை மறந்து நிற்கும் முமுக-க்களுக்கு அவளுடைய அருள் மழை. கிடைக்கும். அவர்கள் உள்ளத்தே அது தேங்கும்.

- நாமோ பையன் பாத்திரத்தைக் கவிழ்த்தது போல நம்முடைய மனத்தைப் பூமியை நோக்கிக் கவிழ்த்து வைத் திருக்கிருேம். பிரபஞ்ச வாசனையே இதில் அதிகமாக ஏறி யிருக்கிறது. இது மலர்ந்து மேல்நோக்கியிருக்கவில்லை. அதோமுகப் பார்வையிலே திளைத்து நிற்கிறதேயன்றி, உயர் வானவற்றை எண்ணுவதில்லை; மேலே நோக்குவதில்லை. அதன் பயன் என்ன? அம்பிகையின் அருள் வெள்ளமாகப் பெய்தாலும் ஒரு சொட்டு நமக்குப் பயன்படுவதில்லை. அதற்குப் புறங்காட்டி நிற்கிருேம். கண் இருந்தும் குருடாக இருப்பதுபோல, காது இருந்தும் செவிடாக இருப்பது போல, மனம் இருந்தும் அதைப் பயனற்றதாக்கி மேலும் மேலும் கீழான எண்ணங்களையே வளர்த்து வருகிருேம்.

‘எம்பெருமாட்டி எனக்கு அருளே செய்யவில்லை என்று பல சமயங்களில் நாம் புலம்புகிருேம்; 'தாயே, உனக்குக் கண் இல்லையா?' என்று கூடக் கேட்கிருேம்.

நாமே கண் இருந்தும் மூடிக்கொண்டிருக்கிருேம்; மன மிருந்தும் மலர்ச்சி பெருமல் இருக்கிருேம். மலரும் மலரில் தான் மணமும் தேனும் இருக்கும். மேல் நோக்கி: மலர்ந்த மனத்தில்தான் ஞானமணமும் அன்புத்தேனும்