பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் குறைதான் 105

தில் ஈடுபட்டவன் அவளை நினைத்து அன்பு செய்யத் தொடங்கும்போது மெல்ல மெல்ல. அவளை அணுகுகிருன். சிந்தையிலும் பேச்சிலும் செய்கையிலும் அவளை மறவாமல் வாழ்கிருன் மெல்ல மெல்ல அவள் அடியை அடைந்து புகல் புகுகிருன். அவன் உள்ளத்தினல் இளங்குழந்தை ஆகிக்கொண்டு வருகிருன். ஞானிகள் பாலர்போல ஆவது தானே முறை: இப்போது பக்தன் தன் அன்னையின் துணையைக்கொண்டே எல்லாவற்றையும் ஆற்றுகிருன். கண நேரமும் அவளை உள்ளத்தில் பிரியாமல் அவள் காலைச் சுற்றிக்கொண்டே வாழ்கிருன். மீண்டும் பச்சைக் குழந்தை ஆகிருன். இப்போது அவன் நடப்பதில்லை: அவனைத் தூக்கிக்கொண்டு அன்னை நடக்கிருள். அவள் உண்பதில்லை; அம்பிகை ஊட்டுகிருள். தனக்கெனச் செயலற்ற நிலையை அவன் அடைகிருன். ஞானப்பால் உண்ணும் குழந்தை வேறு எப்படி இருக்கும்? பிறகு அன்னைக்குள்ளே ஐக்கியமாகிவிடுகிருன்; இரண்டறக் கலந்துவிடுகிருன். உயிரும் உயிரும் கலந்து இணையும் அத்துவித ஆனந்தக் கலப்பு இது.

அன்னையின் காலைப் பிடித்துக்கொண்டு வாழும் குழந்தைக்குக் கவலை எதற்கு? அதற்கு வேண்டியவற்றை யெல்லாம் அவள் பார்த்துக்கொள்கிருள். கைக்குழந்தைக்கு நோய்வந்தால் அந்தக் குழந்தையா டாக்டரிடம் போகிறது? தாய்தானே தாக்கிக்கொண்டு ஒடுகிருள்?

அன்னையின் அடியைப் பற்றிக்கொண்டவர்களுக்கு இந்த இளங்குழந்தை நிலை வரும். அவளுடைய அடித் தாமரையைப் பற்றிப் புகல் அடைந்து விட்டால் அப்பால் நமக்கு ஒரு பொறுப்பும் இல்லை. அவளே தன் ஆட்சியை நடத்துவாள். அந்த அருளாட்சியில் நாம் சேர்ந்து விடுவோம். இப்படி ஆளுகைக்கு என்ன செய்ய வேண்டும்? அவள் திருவடியைப் பற்றவேண்டும். நமக்குப்