பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மாலை பூண்ட மவா

புகல் தந்து அருளாட்சியில் புகுத்துவதற்கே திருவடித் தாமரைகளை அவள் கொண்டிருக்கிருள். -

ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு. இந்த உலகத்தில் உண்டாகும் தாபத்திரயங்களைப் போக்கி மன அமைதியோடு வாழ வைப்பாள், அபிராமி அன்னே. அவளுடைய ஆட்சியிலே துன்பம் ஏது? அவளுடைய அடிநிழலில் வாழ்வாருக்கு மாயையின் துன்பம் எள்ளளவும் அணுகாது. ஞானமயமானது அது; அருள் ஊற்ருக விளங்குவது அது. ஆதலால் அதனைப் பற்றிக்கொண்டவருக்கு அஞ்ஞானம் இல்லை; மயக்கம் இல்லை, மெய்ஞ்ஞானம் வரும்; தெளிவுண்டாகும்.

சேற்றிலே கிடந்து உழன்ற வண்டு ஒன்று சிறகு நனந்து உடம்பெல்லலாம் சேருகிப் பறக்கவும் நகரவும் முடியாமல் திண்டாடுகிறது. எப்படியோ முயன்று முயன்று அந்தச் சேற்றிலே முளைத்த தாமரைக்கு அருகில் வந்து விடுகிறது. அதன் தண்டில்ே உராய்ந்து உடம்பிலிருந்த சேற்றைப் போக்கிக்கொள்கிறது. பிறகு மெல்ல ஏறி இலையில் ஏறித் தன் உடம்பை சுத்தம் செய்துகொள்கிறது. அங்கிருந்து மலருக்குத் தாவி அதில் தங்கத் தொடங்கு கிறது. அதன் பின்பு அதற்குக் குறை ஏது? இன்னறுந்: தேனை உண்டு சிறகை உலர்த்திக்கொண்டு இன்பத்திலே திளைத்து நிற்கும் அல்லவா? - -

பிரபஞ்சச் சேற்றிலே உழன்று கரணங்களில் அழுக்கை ஏற்றிக் கொண்டு வாழும் மனிதன் இங்கே வாழும்போதே அன்னையின் திருவடித் தாமரையைப் பற்றிக் கொண்டானைல் அப்பால் அவனுக்குச் சேற்ருல் பயம் இல்லை. இன்ப வாழ்வு.அமைந்துவிடும். -

இந்த உடம்போடு வாழும்போதே அம்பிகையின்

திருவடி நிழலில் இருக்கும் வலிமையால் துன்பம் இன்றி வாழும் வகை கூடும். இந்த உடம்பு பிராரப்த வசத்தால்