பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மாலை பூண்ட மலர்

வாழ்வில் இன்பம் பெற்று இம்மையில் நலம் பெற வேண்டுமானல் அவளுடைய திருவடித் தாமரைகள் தமக்குத் துணை செய்யும்; யமனிடம் செல்லாமல் பேரானந் தப் பெருவாழ்வாகிய அம்மைநலம் பெறவேண்டுமானல், அவளுடைய கடாக வீrண்யம் துணை செய்யும். இம்மைக் குக் காலும் அம்மைக்குக் கடைக்கண்ணும் உதவி செய்யக் காத்திருக்கின்றன.

அப்படியால்ை நாம் ஏன் உய்யவில்லை? ೨15) நம்முடைய குறை தான்; அம்பிகையின் குறையன்று.

'தெய்வம் காட்டும்; ஊட்டாது' என்று ஒரு பழமொழி உண்டு. தாய்க்குக் குழந்தையினிடம் அன்பு உண்டு. பள்ளிக்கூடத்துக்குப் போகும் குழந்தைக்குச் சிறு பாத்திரத் தில் உணவு வைத்துக் கொடுத்தனுப்புகிருள். அவன் எடுத்துப் போக மறந்துவிட்டால் தானே பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்று கொடுத்து வருகிருள். வீட்டில் விளையாடும் குழந்தைக்கு இவைபோட்டுப் பரிமாறுகிருள்: பிசைந்து வைக்கிருள். இளங்குழந்தைக்குத் தானே பிசைந்து வாயில் ஊட்டுகிருள். அவளுடைய கருணை இப்படிப் பல வழியில் செயல் புரிகிறது. குழந்தைக்குச் சோறுட்டும் வரையில்தான் அந்தக் கருணை செல்லமுடியும். அதற்குமேல் போகமுடியாது. குழந்தைக்காக அவளே உணவை உண்ணமுடியாது. குழந்தையே அதை விழுங்க வேண்டும். அதுபோல அம்பிகை நமக்கு அருள் செய்யக் காத்திருக்கிருள். நாம் அதனைப் பெற அவளே அணுக வேண்டும். ஆற்றில் நிறைய நீர் போகிறது. அதில் துளைந்து விளையாடவேண்டுமானல் ஆற்றையே நம் வீட்டுக்குத் திருப்பிவிட முடியுமா? நாமே ஆற்றுக்குச் சென்று நீராடவேண்டும். r

  • * ஆகவே நாமும் முயற்சி செய்யவேண்டும். அம்பிகை யின் திருவடியைப் பற்றிக்கொள்ளவேண்டும். அவள்