பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் குறைதான் 109.

திருமுன் நின்று அவளுடைய கருணைப்பார்வையிலே முழுக வேண்டும். அவளுடைய கடைக்கண் பார்வைக்கு இரண்டு வேறு தன்மைகள் உண்டு. அன்பர்களைப் பார்க்கும்போது அமுதமாகி நின்று வெப்பத்தைப்போக்கும். அன்பர்களுக்குத் துன்பம் செய்பவர்களைப் பார்க்கும்போது கனலாக இருக்கும். அடிபற்றிய அன்பர்களைத் தன் கடைக் கண்ணுற் பார்த்துப் பார்த்து இன்ப வாழ்வு பெறச் செய்வாள். - -

அம்பிகைக்கு மீனாட்சி என்று ஒரு திருநாமம் உண்டு. அவள் திருவிழி மீனைப் போன்ற வடிவுடையதாகையால் அந்தத் திருநாமம் வந்தது; அதுமாத்திரம் அன்று; தன்மை யாலும் அது மீனை ஒத்திருப்பது. மீன் முட்டையிட்டுத் தன் க்ண்ணுல் பார்த்த அளவில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளியாகும். அதுபோல் உயிர்க் கூட்டங்களைத் தன் பார்வையினல் காப்பாற்றி வாழ்வளிக்கிறவள் மீட்ைசி.

எனவே அம்பிகையின் கடைக்கண் பார்வை தன் ஆட்சியில் வந்து புகுந்து அன்பர்களுக்கு உரமும் இன்பமும் உதவும்; யமன் வரும்போது அவனை ஒட்டிவிடும். தன் குஞ்சுகளை அழைத்துத் தழுவிக் கொள்ளும்போது தாய்க் கோழி அவற்றைத் தன் சிறகுக்குள் அடக்கிக் காக்கிறது. அயற்கோழி வந்தால் அந்தச் சிறகினலேயே புடைத்து ஒட்டுகிறது. மகாமாதாவாகிய அபிராமியின் கடைக்கண் பார்வை அன்பர்களுக்கு வாழ்வும் அந்தகனுக்கு வீழ்வும் தரும் வல்லமை உள்ளது. -

ஆகவே அவள் திருவடி நிழலே அடைந்து அவள் பார்வைக்குப் பொருளாக வாழவேண்டும். அவள் திருக்கோலம் கொண்டு திருவடித் தாமரையும் திருவிழித் தாமரையும் விளங்க நிற்கிருள். அவளால் குறையில்லை; நம்மால்தான் குறை. -

மேல் இவற்றின் மூளுகைக்கு என் குறை: கின் குறையே அன்று.