பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116) மாலை பூண்ட மலர்

இனி அம்பிகையின் பெருமையைச் சொல்ல வருகிரு.ர். சிவபிரான் அன்று முப்புரங்களை எரித்தான். பின்னல் முறுவலால் எரித்தாலும் போருக்கு ஆயத்தம் செய்வது போல வில், அம்பு எல்லாவற்றையும் எடுத்துச் சென்ருன். மேருவை வில்லாகவும் ஆதிசேஷனை நாளுகவும் வைத்துத் திருமாலேயே அம்பாகத் தொடுத்தான். முப்புரங்களையும் அழிக்கலாம் என்ற தைரியம் அவனுக்கு உண்டானதற்கு காரணம் தன் சக்தியில் அவனுக்கு இருந்த நம்பிக்கை தான். அவன் பங்கில் பராசக்தியாகிய அம்பிகை இருக் கிருள். எந்தக் காரியத்தை அவன் செய்யப் புகுந்தாலும் அவனுக்கு மனம் உவந்து துணை செய்ய அவள் நிற்கிருள். தன் கணவன் ஒன்றைச் செய்ய முன் வந்தால் அவனுடன் இருந்து அதை நிறைவேற்ற மனமின்றி வாடியிருக்கும் மனைவியா அவள்? அவனுக்குத் துணையாக நிற்பாள்; அவன் செய்யும் காரியத்துக்கு உவகையுடன் துணை செய்வாள் என்பதை அவள் முகத்தில் உள்ள மலர்ச்சியே காட்டும். அந்த முகம் வாடாமல் வதங்காமல் பளபள வென்று ஒளிவிடும், வாள் நுதல் அந்த மகிழ்ச்சியைத்தானே காட்டுகிறது? .

முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள் நுதலே! -

ஆம்; அம்பிகை இறைவன் பங்கில் இருக்கிருள்; அவனுடைய திருமேனியில் ஒரு பங்கில் இருப்பது மட்டும் அன்று. அவன் எந்தக் காரியம் செய்தாலும் அவன் பங்கில் நின்று மலர்ந்து ஒளி பெற்ற நெற்றியுடன் சக்தியை வழங்கும் பத்தினி அவள். அவள் தன் பங்கில் இருக்கும் தைரியத் தினுல்தான் அவன் பிறரால் செய்ய முடியாத பராக்கிரமச்

யல்களை யெல்லாம் செய்கிருன்.