பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய் புண்ணியம் - 113

அவ்வாறு இல்லாமல் அன்னையை எண்ணி வாழும் வாழ்க்கையை அப்பெருமாட்டி அருளிளுளே என்று பெருமிதம் அடைவது பக்தர்களுக்கு இயல்பு. தம்மினும் சிறந்த அநுபூதிமான்களைக் கண்டு, நமக்கு அந்த நிலை வாய்க்கவில்லையே என்று ஏங்குவதும் அவர்களுக்கு இயல்பே. - -

சென்ற பாட்டில் தம் குறையை எண்ணி வருந்திய அபிராமி பட்டர் இந்தப் பாட்டில் தமக்குக் கிடைத்த புண்ணியப் பயனை எண்ணிப் பெருமிதம் அடைகிரு.ர்.

- அவளே வணங்காமலும் பூசை செய்யாமலும் தியானிக் காமலும் புகழாமலும் இருந்தாலும், அவளிடம் பக்தி செய்ய வேண்டும். அவளுடைய திவ்ய தரிசனத்தைப் பெற வேண்டும் என்று எண்ணியிருப்பதே புண் ணியம் என்கிரு.ர். உலகியலில் அக ப் பட்ட வர் க ளு க் கு இறைவியை நினைக்க நேரம் ஏது? தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாவதற்கு எத்தனையோ தடைகளை நீங்கி, வரவேண் டும் என்று மணிவாசகர் அடுக்குகிருர். நமக்கெல்லாம் தாயாக ஒருத்தி இருக்கிருள், அவள் திருவருளைப் பெறுவதே நம் லட்சியம் என்பதை உள்ளத்தால் உணர்வது எளிய காரியம் அன்று. வாயில்ை சொல்லிக்கொண்டிருக்க லாம். ஆனல் உள்ளமோ உலகியல் இன்பத்தில் ஆழ்ந்து அதையே பெரிதாகப் பாவித்து அதனூடே துளைவதையே விரும்பி நிற்கும். பிறருக்குப் போதிக்கத் தெரிந்த பலர் தம்மளவில் அதைச் செய்வதில்லை. ஆகவே உள்ளுணர். விலே தாகம் உண்டாகி அன்னையின் அருளைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் உண்டாவதே பெரிது. முக்தியை விரும்பும் இச்சையாகிய முமுக த்துவமே அதுதான். அந்த நில வரவேண்டுமானல் முற்பிறவியில் புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும். . . . . . . . .

மாலை-8