பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மால் பண்ட மலர்

'தவமும் தவமுடையார்க் காகும், அவமதனை

அஃதிலார் மேற்கொள்வது' -

என்பது குறள். முன்னைத் தவம் இருந்தாலன்றி இப்போது தவம் செய்யும் ஆசை பிறவாது. ஆதலின் அம்பிகையைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தே ஒருவருக்கு எழுமானல் அது முன் செய்த புண்ணியத்தின் பயனென்றே சொல்லவேண்டும். வலஞ்சுழி வாணனை வாயாரப், பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனலே, என்ன புண்ணியஞ் செய்தன. நெஞ்சமே?’ என்று கேட்கிருர் திருஞானசம்பந்தர். அபிராமிபட்டர், அன்னையைக் காணவேண்டும்; அதற்குரிய அன்பைப் பூணவேண்டும்’ என்று எண்ணும் எண்ணமே புண்ணியப் பயன் என்று சொல்கிருர், - r -

- கன்னியைக் காணும் அன்பு - பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்ருே முன்செய் புண்ணியமே?. .

மனம் அன்பு பூணுதற்கு எண்ணுகிறது; அன்னையைத் தரிசிப்பதற்கு ஏற்ற வகையில் அன்பு பூணவேண்டும் என்று எண்ணுகிறது. அந்த எண்ணம் முற் பிறவியிலே செய்த நற்செயல்களின் ப ய ைகி ய புண்ணியத்தின் விளைவாம். - -

- முதலில் எண்ண வேண்டும்; அதன்பின் அன்பு பூண வேண்டும்; அதன் பயனுகக் கன்னியைக் காணவேண்டும். எல்லாவற்றிற்கும் மூலம் மனத்தினல் எண்ணுதல், எந்தக் காரியம் செய்தாலும் மனத்தினல் விரும்பிச் செய்யா விட்டால் அது பயன்தராது. -

மனத்துக்கண் மாசில தைல் அனைத்தறன் ஆகுல நீர பிற’’ -