பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 மாலை பூண்ட் மலர்

உலகம் ஒளி பெறும். அவள் இமையாத முக்கண்ணுடைய வளாதலின் உலகம் ஏதேனும் ஒரு சுடரையாவது எப்போ

தும் பெற்றிருக்கிறது.

நெற்றியிலே அக்கினிக்கண் இருக்கிறது. அது ஞானக் கண். சிவபெருமானுக்கு எப்படி ஞான நேத்திரம் உண்டோ அவ்வாறே எம்பெருமாட்டிக்கும் உண்டு; ஒன்ருே டிரண்டு நயனங்களே', 'முக்கண்ணியை' (73, 101) என்று பின்னே பாடுவார் இவ்வந்தாதியின் ஆசிரியர். த்ரிநயன, த்ரிலோச,ை த்ரியம்பகா என்ற திருநாமங்கள் அம்பிகை நெற்றிக்கண்ணுேடு சேர்ந்த மூன்று திருவிழிகளை உடையாள் என்பதை உணர்த்துகின்றன. ஒளிபொருந்திய நெற்றியின் நடுவிலே கண்ணே உடையவள் அபிராமி.

வாள் நுதற் கண்ணியை

அம்பிகை தேவர்களுக்கு எத்தனையோ உபகாரங்களைச் செய்திருக்கிருள். பண்டாசுரன், மகிஷாசுரன் முதலிய அவுணர்களே அழித்து அவர்களுக்கு அருளியிருக்கிருள். தேவர்களுக்கு நலம் தரும் செயல்களைச் செய்வதில் ஊக்க முடையவள் அன்னையென்பதை தேவகார்ய ஸமுத்யதா' என்ற அவள் திருநாமம் புலப்படுத்தும். ஆதலின் தேவர் கள் எப்போதும் அம்பிகையை வழிபடும் எண்ணத்தோடு இருக்கிருர்கள். முன்பு அவளால் அடைந்த நலன்களை மனத்தில் இருத்தி இனியும் அத்தகைய இடையூறுகள் வந்தால் போக்கிக் காப்பாற்றுதற்கு அவளேயன்றி வேறு துணை இல்லை என்பதையும் உணர்ந்து, தேவர்கள் அவளை அணுகுகிருர்கள் வணங்குகிருர்கள்; தம் அன்பு புலப்பட வழிபாடு செய்கிருர்கள். தேவராஜனகிய இந்திரன் முதல் எல்லாத் தேவர்களும் அம்பிகையின் அடியார்களாக நின்று வழிபடுகிருர்கள். . . . . . .

விண்ணவர் யாவரும் வந்து இற்ைஞ்சிப்

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை,