பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு

மனிதனைச் சமுதாய விலங்கு (Social animal) என்று சொல்வார்கள். தனி மனிதனுக வாழ அஞ்சுபவன் மனிதன். கூட்டம் கூட்டமாக இணைந்து வாழும் இயல் புடையவன். வீடு சிறு கூட்டம். வீதி அதைவிடப் பெரிய கூட்டம். ஊர், நாடு, உலகம் என்று அது அளவில் விரிந்து கொண்டே செல்கிறது. -

கூடிக் கூடி வாழும் மனிதனுக்கு அந்தக் கூட்டத்தின் பொதுவான இயல்புகள் அவனே அறியாமலே வந்து படிந்து விடுகின்றன. ஒரு குடும்பத்தினர்களுக்குள் பொதுவான சில பழக்க வழக்கம் இருக்கும்; ஒர்

ஊரினருக்குச் சில சிறப்பான இயல்புகள் இருக்கும்.

ஒரு பிரதேசத்தினருடைய பழக்க வழக்கங்களில் சில சிறப் பான அமைதிகள் இருக்கும். நடை, உடை, பாவனை, பேச்சு இவற்றில்.இந்தச் சிறப்பியல்பைக் காணலாம். -

இவ்வாறு சமுதாயத்தில் வளரும் மனிதன் ஒரு குழுவை விட்டு மற்ருெரு குழுவைச் சாரும்போது புதிதாகச் சேர்ந்த குழுவின் இயல்பு மெல்ல மெல்ல அவனிடம் சாரும். நெருக்கமாகப் பல காலம் சார்ந்தால் அந்த இயல்புகள் தாமே அவனிடம் புகுந்து நிலைகொள்ளும். - -

'நிலத்தியல்பால் நீர்திரிந் தற்ருகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு'

என்று திருவள்ளுவர் கூறுவார். தனக்கென்று நிறமும் மணமும் சுவையும் இல்லாத நீர் தான் சாரும் நிலத்தின் தன்மையால் அதற்குரிய நிறம் முதலியவற்றை ஏற்றுக் கொள்ளும். அவ்வாறே மக்கள் தாம் சாரும் இனத்தின்