பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடம் கொண்ட நாயகி

கடவுளைத் துதித்து வழிபடும் அன்பர்கள் அவருடைய திருவுருவத் தியானத்தை இடைவிடாது செய்வார்கள். பல காலம் தியானம் செய்வதனுல் அவர்களுடைய நெஞ்சமே எம்பெருமானைப் பிரதிஷ்டை பண்ணிய திருக் கோயிலாகிவிடும். தம்மை மறந்து அந்தத் தியானத்தில் ஈடு

பட்டு இன்புறுவார்கள்.

அபிராமிபட்டர் அம்பிகையின் திருமேனி லாவண்யத் தைப் பலபடியாகப் பாராட்டிப் போற்றிப் பணிபவர். மகா மாதாவின் அங்கங்களைத் தனித்தனியே தரிசித்து, அவற்றின் தத்துவங்களில் ஈடுபடுகிறவர். தெய்விகத் திருவுருவத்தை நினைக்கும்போது உலகத்தில் உள்ள பாஞ்சபெளதிக சரீரங்களே எண்ணுவதுபோல எண்ணக் கூடாது. தெய்விக உணர்ச்சியுடன் தியானத்தில் புகும்போது நம்முடைய எண்ணமே இல்லாமல் போய்விடும். தாயாகிய பிராட்டி சர்வாங்க சுந்தரியாக நிற்கும்போது சமுத்திரத்தில் கரைந்த மண்ணுங்கட்டியைப்போல நம்முடைய மனம் கரைந்து விடும். அந்த நிலையில் உலகியல் கடந்த ஆனந்த அதுப் வத்தைத் தவிர, வேறு எந்த விதமான உணர்ச்சியும் இராது. - -

இளம் ப்ருவத்தில் தளர்நடை போட்டு நடக்கும் தன் பெண் குழந்தையைத் தகப்பன் பார்க்கிருன் குழந்தை ஆடையின்றிப் பேரழகுடன் பிறந்த திருமேனியோடு நிற் கிறது. அந்தக் குழந்தையைக் கண்ட தகப்பனின் கண்களில் மாசுடைய பார்வை இராது. ஆடை அணியாத பெண்ணப் பார்க்கிருேம் என்ற எண்ணமே இராது. இது