பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடம் கொண்ட நாயகி 129

என்ற பட்டினத்தார் பாடலில் இந்தக் குறிப்பைக் காண் கிருேம். ஞானியர் எப்படிப் பார்க்கிரு.ர்கள் என்பதை இது தெளிவாகச் சொல்கிறது. -

அம்பிகை எல்லா உயிர்களுக்கும் தாய்; எல்லா உயிர் களும் வாழ்ந்து வரும்படி அருள்புரியும் அன்னை. அவளுடைய அங்கங்கள் யாவும் அவளுடைய தாய்த் தன்மையை நினைப் பூட்டுவன. தாய் என்னும் பிழம்பில் ஒவ்வோர் அங்கமும் தாய்த்தன்மையைத் தாங்கி நிற்கிறது.

பக்தர்கள் அன்னையை வருணிக்கும்போது இன்ன அங்கத்தைச் சொல்லவேண்டும், இன்ன அங்கத்தைச் சொல்லக்கூடாது என்று வேறுபடுத்திப் பார்க்கிறதில்லை. அவர்களுடைய திருப்பாடல்களைப் படிக்கும்போது அவர் களுடைய நிலையிலிருந்து பார்க்கவேண்டும். அப்போதுதான் குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள உறவின் தூய்மையும், கடவுளை அன்னையாக வழிபடும் நெறியிலுள்ள உள்ளத் து.ாய்மையும் புலனுகும். ~ *

அபிராமிபட்டர் தாய்மைக்குரிய சின்னமான இரண்டு அங்கங்களையும் வருணிக்கிரு.ர். முதலில் அன்னையின் நகில்களைச் சொல்கிருர். ஞானப்பால் தரும் கிண்ணங்கள் அவை. அவை பரமேசுவரனுடைய உள்ளத்தைக் குழை விக்கும் தன்மை உடையவை. சங்காரத்தில் ஈடுபடும் அப்பெருமானுக்குச் சில சமயங்களில் வன்மையான நெஞ்சம் உடையவரோ என்று நினைக்கும்படி செயலும் தோற்றமும் இருக்கும். தர்மத்தை நிலை நிறுத்துபவர் களுக்குப் பொல்லாதவர்களைத் தண்டிக்கும்போது மனத் தைக் கல்லாக்கிக்கொள்ள வேண்டிய் அவசியம் உண் டாகும். சிவபெருமானுக்கு அந்த நிலை உண்டு, அவருடைய வலிய நெஞ்சை இளகச் செய்யும் ஆற்றல் எம்பெருமாட்டி யின் திருத்தனங்களுக்கு இருக்கிறது. இதை இந்த அடியார் சொல்கிருர். - -- - .

மாலை-9