பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மாலை பூண்ட was

இறைவன் தன் திருவுள்ளப்படி எல்லாரையும் ஆட்டி வைப்பவன். அந்தப் பெருமானுடைய திருவுள்ளம் எம்பெரு பாட்டியின் திருவுள்ளப்படி ஆடுகிறதாம். அவனுடைய உள்ளத்தை ஆட்டி வைப்பதற்கு உரிய கருவியாக அன்னே யின் நசில்கள் இருக்கின்றனவாம். -

அம்பிகையின் நகில்கள் பரந்து படர்ந்து இருக்கின்றன. நன்முகப் பூரித்து இரண்டும் ஒரேமாதிரியான அமைப்புடை யனவாய் விளங்குகின்றன. அன்பினுல் குழைகின்றன. அழகான முத்துமாலையை அம்பிகை அணிந்திருக்கிருள். தனங்களாகிய மலையைக் கொண்டு சிவபெருமானுடைய வன்மையான நெஞ்சைத் தான் நினைத்தபடி எல்லாம் நடனம் செய்யும்படி செய்கிருள் அம்பிகை. தன்னுடைய விருப்பப்படி தன் பதியை ஆட்டிவைப்பதே அம்பிகையின் விரதம். அம்மை போடும் தாளத்துக்கு ஏற்ப ஐயன் அம்பலத்தில் ஆடுவான் என்று கூறுவதுண்டு. சக்தி இல்லா விட்டால் சிவபெருமானுக்கு விளக்கம் இல்லை. சிவமெனும் நிர்க்குண மூர்த்தியின் இயக்கமே சக்தி என்று சொல்லி விடலாம். ... " -

எல்லாரையும் அசைத்துத் தான் அசையாமல் அசஞ் சலகை இருப்பதனால் சிவபெருமானுக்குத் தானு என்ற பெயர் வந்தது. உலகத்தை எல்லாம் தன்னுடைய வலைக்குள் அகப்படுத்தும் காமன் சிவபெருமானை ஒன்றும் செய்ய முடியவில்லை. அத்தகைய வலிய நெஞ்சை உடையவன் சிவ பிரான். அப்பெருமானைக் கொங்கை மலை கொண்டு நடம் கொள்கிருள் எம்பெருமாட்டி. -

இடம்கொண்டு விம்மி இணைகொண்டு

இறுகி இளகி முத்து வடம் கொண்ட கொங்கை

இறைவர் வலிய நெஞ்சை நடம்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி.