பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மாலை பூண்ட மலர்,

சிலம்பு திருவடியைச் சுற்றியிருக்கும். வேதம் அம்பிகையின் திருவடியைச் சூழ்ந்து அரற்றுகின்றது. சிலம்புக்குள் பரல்கள் மறைவாக இருக்கும். அதுபோல வேதத்துக்குள் பல பொருள்கள் இரகசியமாக இருக் கின்றன. அதல்ை மறை என்ற பேர் அமைந்தது. அம்பிகை நடந்து வந்தால் அவளுடைய சிலம்பொலி பிறவற்றிற்கு இல்லாத ஒலியைக் காட்டி அம்பிகை வருகிருள் என்பதைப் புலப்படுத்தும். வேதமோ அம்பிகை யின் பெருமையை ஒலித்துத் தெரிவிக்கின்றது. இந்த மூன்றையும் அடுத்தபடி சொல்கிருர் அபிராமிபட்டர்.

- கல் அரவின் படம்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே.

[நல்ல பாம்பின் படத்தை ஒத்த கடிதடத்தையும் குளிர்ச்சியையுடைய வாய்மொழிகளையும் வேதமாகிய சிலம்பையும் உடையவள். -

பணி. குளிர்ச்சி. பரிபுரம் - சிலம்பு. பரிபுரை - சிலம்பை அணிந்தவள்.) -

அம்பிகை வேதத்தையே சிலம்பாக அணிந்துகொண் டிருக்கிருள் என்பதைப் பின்வரும் நூற்பகுதிகள் காட்டும்.

'அடிச்சூட்டு நூபுரமோ ஆரணங்கள் அனைத்துமே” - - (தக்க. 119) ஆரண நூ. புரஞ்சிலம்பும் அடிகள் போற்றி' -

- (திருவிளையாடல், காப்பு) வேதங்கள் ஒருநான்கும் மெல்லடிமேல் வியன்சிலம்போ' - - - (பாசவதைப்பரணி, 192)

இறைவர் வவிய நெஞ்சை நடம்கொண்டது @ಹT65 மலை என்று வெளிப்படையாகச் சொன்னலும், மற்ற்வை யும் அப்பெருமான ஆட்படுத்தின என்பது குறிப்பால் பெறப்