பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடம் கொண்ட நாயகி 133

பட்டது. வேதப்பரிபுரை, நலங்கொண்ட நாயகி' என்று கூட்டிப் பொருள் செய்யவேண்டும். -

அருளே வடிவாகிய எம்பெருமாட்டியின் வசப்பட்டு இறைவன் ஆடுகிருன் என்றது, பராசக்தியின் இயக்கத்தால் சிவம் எனும் பொருள் இயங்குவதைக் குறிப்பது. .

சிருஷ்டி முதலிய பஞ்சகிருத்தியங்களும் சிவபெருமா னுடைய அருளின் இயக்கத்தால் நிகழ்வன என்ற க்ருத்தையே இது காட்டுகிறது.

இடம்கொண்டு விம்மி இணைகொண் டிறுகி

இளகிமுத்து - வடம்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர்

வலியநெஞ்சை நடம்கொண்ட கொள்கை நலம்கொண்ட நாயகி,

நல்லரவின் படம்கொண்ட அல்குற் பனிமொழி வேதப்

பரிபுரையே

இது அபிராமி அந்தாதியின் 42-ஆம் பாட்டு.