பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவர் பாகத்தில் இருந்தவள் 137

மாட்டியின் திவ்யதரிசனத்தைக் கண்டமாத்திரத்தில் ஒரளவு அச்சம் போகுமேயொழியப் பலகாலமும் தொடர்ந்து வரும் துன்பங்கள் போவதில்லை. அதற்கு மாற்ருக, இனி உனக்குத் துன்பமே இல்லை; நீ என் குழந்தை; இனி அச்ச மின்றி இரு' என்று தன்னுடைய இனிய ஒலியால் அம்பிகை அடியார்களுடைய உள்ளத்தைக் குளிர்விக்கிருள். பசிக்கு அஞ்சின குழந்தைக்குத் தாயைக் கண்டவுடன் அச்சம் போகும். பிறகு அவள் பால் கொடுத்தவுடன் பசி போகும். நல்ல மருத்துவர்ைக் கண்ட நோயாளிக்கு அந்த நோயினுல் துன்பப்படுகிருேமே என்று இருந்த அச்சம் அவரைக் கண்ட ஞான்றே ஒழியும். பிறகு அவர் தரும் மருந்தினுல் நோய் போகும். நோய் வேறு, நோய் வந்து விட்டதே என்ற கவலை வேறு. நோயைவிட நோய் வந்து விட்டதே என்ற கவலை மிகக்கொடியது. மருத்துவரைக் கண்டபோது அந்தக் கவலை திருவதும், அவர் தந்த மருந்தை உண்டபோது நோய் தீருவதும் உலக இயல்பு. அதே வகையில் எம்பெருமாட்டியின் அடியைப் பற்றிக்கொண்டு அவளுடைய திருக்கரங்களையும், அழகிய திருமேனியையும் கண்ட அடியார்களுக்கு, இனி நமக்குத் துன்பம் இல்லே என்ற தைரியம் முகிழ்க்கிறது. ஆனல் அநாதியாக இருக்கிற வாசனைகள் உள்ளே புதைந்து கிடக்கின்றன. அவற்றை

எல்லாம் போக்குவதற்கு அம்பிகை தன்னுடைய இனிய மொழியை அருள்கிருள். அதைக் கேட்டபோது அம்பிகை யின் உண்மையான தத்துவம் தோன்றுகிறது. அவள் எல்லா மும்மைகளுக்கும் தலைவி, திரிபுரசுந்தரி என்பதும் தோன்றுகிறது. அவள் திருமேனி முழுவதும் செம்மையாக சிந்துர வண்ணம் உடையதாக இருப்பதையும் அவன், அறிந்துகொள்கிருன். எல்லாம் அவள் மயமாகக் கண்டு அநாதி காலமாகத் தன்னிடம் இருந்த பாசம் மாய, அந்தச் செவ்வொளியில் தன்னைக் கரைத்துக்கொண்டு நிற்கிருன்.