பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 மாலை பூண்ட் மலர்

இப்படிப் படிப்படியாக அநுபவமுறையைத் தெரிவிப் பாரைப் போல வருணனைகளை அமைக்கிருர், இந்த ஆசிரியர். முதலில் சீறடியையும், பின்பு பாசாங்குசத்தை யும், பஞ்ச பாணத்தையும், அப்பால் இனிய சொல்லேயும் கூறிப் பிறகு திரிபுரசுந்தரி என்றும், சிந்துர மேனியள் என்றும் நினைவுறுத்துகிருர். தாம் அநுபவித்த முறைப் படியே சொல்கிறவர் ஆதலின், பக்தி செய்து பயத்தைப் போக்கி, இன்ப உணர்வைப் பெற்ற முறையை இந்த வருண்னை குறிக்கிறது. -

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்ச பாணி இன்சொல் திரிபுரசுந்தரி சிந்துர மேனியள்.

அன்னையாகிய எம்பெருமாட்டியின் திருவுருவத்தை. இப்படிப் பாடியவர் அடுத்தபடி அப்பளுகிய எம்பெருமானே நினைக்கிருர். அப்பனுக்குப் பெருமை பெருமாட்டியைத் தன் பக்கத்தில் வைத்திருப்பதே. இருவருக்கும் வேறுபாடு: இல்லை. அவனுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை அன்னைக்கும் உண்டு. இதனை அவனுடைய திருமேனியில் சரிபாதியைத் தான் ஆக்கிரமித் துக் கொண்டிருப்பதளுல் அம்பிகை உணர்த்துகிருள். பிரமனுடைய நாவில் மாத்திரம் கலைமகள் இருக்கிருள். திருமால் திருமேனியில் மார்பில் மாத்திரம் திருமகள் இருக்கிருள். சிவபெருமானுடைய திருமேனியிலோ சரிபாதி யில் அம்பிகை எழுந்தருளியிக்கிருள். மற்றவர்களுடைய சக்திகள் அவர்களிடம் ஓர் அம்சத்தில் மாத்திரம் இருக்க, சிவபெருமானுடைய சக்தி நூற்றுக்கு நூருக அமைந்திருக் கிற உண்மையை இந்தத் தோற்றம் புலப்படுத்துகிறது. இறைவன் செம்பாகத்தில் இருக்கும் பிராட்டி' என்று: சொல்ல வருகிருர். அந்த இறைவனைப் பற்றியும். சொல்கிருர். - -