பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவர் பாகத்தில் இருந்தவள் 141

வண்ணத்தினுள் (8) என்பவற்றிலும் காணலாம். இறைவ னுடைய செம்பாகத்தில் அம்பிகை இருப்பதை.

'தம்பிரான் திருமேனியில், செம்பாதி புங்கொண்ட

தையஞயகி' - - என்று குமரகுருபரரும் கூறினர்.

அம்பிகையின் உருவத்தியானத்தினால் அநாதியாக வருகிற மலங்கள் கெட்டு இன்பம் உண்டாகும் என்பதை இந்தப் பாட்டுக் குறிப்பிக்கிறது. -

பரிபுரச் சீறடிப்பாசாங் குசைபஞ்ச பாணி -

இன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியன் தீமைகெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப் புச்சிலைக்கை எரிபுரை மேனி இறைவர்செம் பாகத் திருத்தவளே.

(சிலம்பை அணிந்த சிறிய திருவடிகளையும் பாசாங்கு சத்தையும் உடையவள், ஐந்து மலர் அம்புகளை ஏந்தியவள், இனிய சொல்லையுடைய திரிபுரசுந்தரி, சிந்துரம்போலச் சிவந்த திருமேனியை உடையவள், மனத்தினல் உலகுக்குத் தீமை செய்யவேண்டுமென்று நினைந்து அவ்வாறு செய்த திரிபுரத்தில் இருந்த வஞ்சகர்களாகிய அசரர்களும் அஞ்சும்படியாக வளைத்த மேருமலையாகிய வில்லைத் திருக் கரத்தில் பெற்றவரும், நெருப்பை ஒத்த திருமேனியை உடையவருமாகிய சிவபெருமானது சரிபாதியில் எழுந்தருளி இருந்தவள் ஆகும். - * , , ,

மேனியள் இருந்தவள் என்று கூட்டவேண்டும், பரிபுரம். சிலம்பு. சீறடி-சிறிய அடி. நெஞ்சில் புரி-மனத்தில் எ ண் ணு கி ன் ற. குனித்தல்-வளைத்தல். சிலை-வில் செம்பாகம்- சரிபாகம்.)

இது அபிராமி அந்தாதியில் 43-ஆவது பாடல்.