பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தவமும் கைதவமும்

ஒரு நாள் தாயுமானவர் இறைவனைப் பூசிக்கவேண்டு மென்று எண்ணி, ஒரு பிம்பத்தை எடுத்து வைத்துக் கொண் டார். அதற்கு மலரிட்டு அருச்சனை செய்யலாம் என்று நந்த வன்ம் சென்று பூக்கொய்ய எண்ணினர். வெள்ளை வெளே. ரென்று பூத்திருக்கும் நந்தியாவட்டைக்குமுன் நின்ருர். அப் போது அவருடைய பக்குவம் உயர்ந்து நின்றது. சகுனமூர்த் தியில் இறைவனை வழிபடும் நிலைக்கு மேலே, எதையும் கடவு ளாகப் பார்க்கும் நிலையை அடைந்தார். அப்போது எதிரே இருந்த மலரிலும் இறைவனைக் கண்டார். அந்த மலரில் இருந்த இறைவன் அவரைப் பார்த்துச் சிரித்தான்; என்னைப் பறித்து எனக்கே அருச்சனை செய்யப் போகிருயோ?” என்று சொல்கிறமாதிரி இருந்தது. அதனல் மலரைப் பறிக்க எண்ணியவர் பறிக்காமல் சும்மா இருந்துவிட்டார்.

இப்போது அந்த மலரே அவருக்கு இறைவனகத் தோன்றியது. இறைவனைக் கண்டால் கையெடுத்துக் கும்பிட வேண்டும் அல்வவா? இருகைகளையும் கூப்பி அஞ்சலி செய்ய நினைத்தார், அப்போது பின்னும் மேம்பட்ட நிலையை அடைந்தார். புறத்தே இருந்த மலரில் இறைவன் இருத்தலைப் பார்த்ததுபோலத் தம்முடைய இதய மலரிலும் அவன் இருத்தலை உணர்ந்தார். முன்னே இருந்த இறைவனைக் கும் பிட்டால் உள்ளத்தில் இருந்த இறைவனைக் கும்பிடமுடியாது. முன்னும் பின்னுமாக உள்ள இரண்டு இடங்களிலும் எழுந் தருளியிருக்கும் அவனை இருமருங்கும் சுண்டுவிரல் அமைந்த கைஇருத்தால் ஒருங்கே கும்பிடலாம். நம்முடைய கை அமைப்பு அவ்வாறு இல்லையே! முன் இருந்த மலரில் உள்ள