பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மாலை பூண்ட மலர்

இறைவனை மட்டும் கும்பிட்டால் உள்ளமாகிய மலரில் உள்ள இறைவனேக் கும்பிடுவது ஆகாது. இரு மலர்களிலும் உள்ள இறைவன் திருவுருவங்களைக் கும்பிட்டால்தான் முழுக்கும்பிடு ஆகும். அப்படியின்றி. முன்னுள்ள மலரில் ஒளிரும் இறைவனே மாத்திரம் கும்பிட்டால் அது அரைக் கும்பிடே ஆகும். ஆகவே மலரைப் பறிக்காமல் நின்ற அவர் இப்போது கும்பிடுவதையும் விட்டுவிட்டார். முன்னும் பின் னும், மேலும் கீழும், உள்ளும் புறமும் இறைவனேயே காணும் காட்சி அவருக்கு இப்போது சித்தித்தது. ஆகவே அவர் பூவைப் பறிக்கவும் இல்லை: பூசை செய்யவும் இல்லை; கும்பிடவும் இல்லை. இதை ஒரு பாட்டில் அவரே ச்ொல்கிருர்,

பண்ணேன் உனக்கான பூசையொரு வடிவிலே

பாவித் திறைஞ்சஆங்கே

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தியப்

பனிமலர் எடுக்கமனமும்

நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கவெனில்

நாணுமென் உளம்நிற்றி நீ

நான்கும் பிடும்போ தரைக்கும்பி'டாதலால் நான்பூசை செய்தல்முறையோ?"

இறைவனுடைய திருக்கோயிலை வலம் வருதல், அவன் திருமுன் வணங்குதல் முதலியவை சரியை என்னும் சோ பானம் ஆகும். இறைவனைத் திருவுருவத்தில் அமைத்துப் பூசை செய்து வழிபடுதல் முதலியவை கிரியை ஆகும். அவனை உள்ளத்தில்ே வைத்துத் தியானம் செய்து நிஷ்டை கூடுதல் யோகம் ஆகும். மெய்யுணர்வு பெற்று என்றும் மாருத நடுநிலையில் நின்று சுகதுக்கங்களைச் சமமாகப் பாவிக்கும் பயிற்சி ஞானம் ஆகும். இந்த நான்கு படிகளை யும் கடந்து அநுபூதிமான்களாக நிற்பவர்களுக்குச் சரியை முதலியவற்ருல் யாதொரு பயனும் இல்லை. காற்று