பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் கருணை

- உலகில் பெரியவர்களாகப் போற்றுதற்குரியவர் களிடம் உள்ள பெருங்குணங்களில் மிகச்சிறந்தது கருணை. அதனால் அவர்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டு விளங்குவார்கள். பிறர் ஏதேனும் துன்பம் இழைத்தால் அதைப் பொறுத்துக்கொண்டு அவர்களிடத்திலும் அன்பு பாலிப்பதை மிகச் சிறந்த பண்பாகக் கொள்வர் பெரியர்.

இன்னுசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு'

என்று திருக்குறள் கூறுகிறது.

மக்களில் சிறந்த சான்ருேர்களுக்குப் பிறர் குற்றம் பொறுத்து அருளுவது சிறந்த இலக்கணம் என்ருல், எல்லாக் குணங்களும் நிரம்பியவனென்று போற்றும் இறை வனுக்கு உள்ள கருணையை அளவெடுத்துச் சொல்ல

முடியாது. அவனே அருட்கடல் என்று பெரியவர்கள்

ப்ோற்றுகிரு.ர்கள். கடல் தன்னிடம் வந்து சேரும் எல்லா வற்றையும் ஏற்றுக்கொண்டு தன் இயல்பு மாருமல் இருப்பது போல, இறைவன் தன்னைப் போற்றினலும் துாற்றினாலும் கருணை மாருத பேராளன். தனக்குத் தீங்கு இழைக்கிருர்களே என்ற சினம், சிறிய அறிவும் சிறிய ஆற்றலும் உடைய மனிதர்களுக்கு உண்டாவது இயல்பு.

இறைவனுக்கோ யாராலும் தீங்கு இழைக்க முடியாது.

தாய் தன் பொல்லாத குழந்தைக்கு உணவு வழங்கு கிருள். பிள்ளை தன்னை வைது இழிவு செய்தாலும் அவன் தன்மை பெற வேண்டுமென்றே வேண்டுகிருள். பெற்ற