பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் கருணை 1.59

இயல்பு. பக்தனும் அப்படித்தான் இருப்பான். பக்தியில் எவ்வளவு உயர்ந்தவகை இருந்தாலும், தாயே, எனக்கு இன்னும் தக்கபடி பக்தி உண்டாகவில்லையே!' என்று. கதறுவான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பாடல் களில் இந்த நைச்சியாதுசந்தானத்தைக் காணலாம். தீங்கைக் கண்டால் இயல்பாகவே அருவருப்பு உண்டாகும் தன்மையைப் பயிர்ப்பு என்று சொல்வார்கள். அந்தப் பண்பு அவர்களிடம் மிகுதி.

அம்பிகையை ஒரு கணம் நினையாமல் இருந்தாலும் பல யுகம் மறந்தது போலத் துடித்துப் போவார்கள் அன்பர்கள் . அபிராமிபட்டர் சிறந்த அன்பராக இருந்தாலும் அம்பிகை .யின் கருணைக்கு முன்னர்த் தம்முடைய அன்பு எத்துணை அற்பமானது என்று எண்ணுகிருர், தாம் எத்தனையோ அபசாரங்களைப் புரிபவரைப்போல நினைத்து மறுகுகிரு.ர். இது பிரேமையின் இயல்பு. -

"தாயே, நான் குறைபாடு உடையவன். குற்றம் செய்வது என் இயல்பு. நீ தயையால் நிறைவுடையவள். என்னைப் பொறுத்தருள வேண்டும்' என்று மன்ருடுகிரு.ர்.

முதலில் பொதுவாகப் பெரியவர்கள் இயல்பு குற்றம் செய்தவர்களைப் பொறுப்பது என்று கூறியவர், அப்பால் அம்பிகையை நோக்கித் தம் குறைகளைப் பொறுத்து ஆட் கொள்ள வேண்டும் என்று கூற வருகிரும். -

வெறுப்பதற்குரிய செயல்களைத் தம்மைச் சார்ந்த அடியவர்கள் செய்தால், அவற்றைப் பெரியனவாகப் பாராட்டாமல், இவர்கள் நன்மையன்றி வேறு புகல் இல்லாதவர்கள் என்று எண்ணி, அவர்கள் குற்றங்களைப் பொறுக்கும் இயல்பு பெரியவர்களுக்கு உண்டு. இது இன்று நேற்று வந்த இயல்பு அன்று. நெடுங்காலமாகக் குணங் களால் மிக்கவர்களிடம் காணப்படும் சீரிய பண்பு இது இதை முதலில் எடுத்துச் சொல்கிரு.ர். . . .