பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 - மாலை பூண்ட மலர்

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

தம் அடியாரை மிக்கோர் - பொறுக்கும் தகைமை புதியது

அன்றே? . . [தம் அடியவர்கள் அவர்களை வெறுப்பதற்குரிய இயல்பையுடைய குற்றங்களைச் செய்தாலும் அவர்களைக் குணங்களால் மிக்க சான்ருேர்கள் பொறுக்கும் இயல்பை மேற்கொண்டு செயல் செய்தல் புதியது அன்றே; இது நெடுங்காலமாக வந்த பழக்கம் அல்லவா?

தகைமைகள் - இயல்புடைய செய்கைகள்; பண்பாகுப் பெயர்.1 . -

அபிராமிபட்டர் தம் தாழ்வைக் கூறுவதோடு ஒரு. வகையில் அம்பிகையின் தயைக்குப் பாத்திரராவதற்குரிய உரிமை உண்டு என்பதையும் சொல்கிரு.ர். அப்படிச் சொல்வதற்கு முன் அம்பிகையை விளிக்கிருர். தம்முடைய கருத்துக்கு அரண் செய்யும் வகையில் அம்பிகையை வருணிக்கிருர், ... " - . . "

அன்னை பரமசிவனுடைய வாமபாகத்தில் இணைந்திருக் கிறவள்; பொன்போன்றவள். அவளைப் பெற்றமையால் இறைவன் பொருள் படைத்த செல்வனைப்போலச் செம்மாந்து விளங்குகிருன். இறைவன் எத்தகையவன்? அவனுடைய கருணையை அவன் திருக்கழுத்துக் காட்டு கின்றது. எல்லாரும் அஞ்சும்படி வந்த ஆலகால விஷத்தை அவன் உண்டான். அதனால் அவன் கண்டம் கறுத்தது. ஆயினும் அதை அவன் ஏற்றுக்கொண்டான். கொடிய நஞ்சையும் ஏற்றுத் தன் கழுத்தில் அழகாக அமைத்துக் கொண்ட பெருமான் அவன்.

" உன்னுடைய கணவன் நஞ்சையும் ஏற்றுக்கொண்ட வன் அல்லவா? அவனுடைய வாழ்வுக்குப் பொன்னக அவ. னுடைய இடப்பாகத்தில் இணைந்து உறையும் தாயே! நீ