பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு 17t

இப்படி எதற்கும் தட்டுப்படாமல் இருக்கும் பொருள் என்று சொன்னவர், நாம் உணரும் வகையில் அது இருப் பதை இறுதியில் சொல்ல வருகிரு.ர். இப்படி உள்ள் பொருள் உலகுக்குப் பயன்படாமல் எங்கோ மறைந்து நிற்கிறது’ என்ருல், அதைப்பற்றிப் பேசி பயன் என்ன?" என்ற எண்ணம் தோன்றுமே! அந்தப் பொருள் நமக்கு நன்மையைத் தந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்கிருர்,

உலகத்தை, இருள் தருமா ஞாலம்’ என்றும். "மாயிருள் ஞாலம்' என்றும் புலவர்கள் சொல்வார்கள், உலகத்துக்கு இருட்டுத்தான் உரிமையானது. அதனைப் போக்கக் கதிரவனும் திங்களும் உதவுகின்றன. நமக்குக் கண் இருந்தாலும் அந்தச் சுடர்கள் இல்லையானல் பொருள் கள் தெரிவதில்லை. உலகம் விளக்கம் பெறுவது கதிரவ லுைம் சந்திரலுைம். கதிரவன் தோன்றும்போது பகல் தோன்றுகிறது. அவன் பகலை உண்டாக்குகிருன். ஆதலால் திவாகரன் என்ற பெயர் அவனுக்கு ஏற்பட்டது. சந்திரன் நிலவினல் இருட்டைப் போக்குகிருன், அவனை நிசாகரன்' என்று சொல்வதுண்டு. காலையைச் செய்பவன் கதிரவன் என்பதை, காலைசூழ் செங்கதிர்' என்று தக்கயாகப்பரணி (279) கூறுகிறது. மதுரைக்காஞ்சி, பகற்செய்யும் செஞ் ஞாயிறும் இரவுச் செய்யும் வெண்டிங்களும் (7 - 8) என்று கூறுகிறது. பகலை உண்டாக்குவது ஞாயிறென்றும், இரவைச் செய்வது திங்களென்றும் அது குறிப்பிடுகிறது.

இவ்வாறு ஒளிதரும் இரண்டு சுடர்களின் இடையிலும் இருந்து அந்தப் பொருள் சுடர் வீசுகின்றதாம். ஒளி மயமாக இருக்கும் பரம்பொருளுக்குச் சோதியென்றும் சுடர் என்றும் பெயர் உண்டு. அம்பிகையே அந்தப் பரம் பொருள். அவர் சூரியனுக்கு நடுவே இருந்து அதை ஒளி வீசுவதாக்கிப் பகலை உண்டாக்கக் காரணமாகி ருள்; சந்திர