பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவாப் பேறு

அழகான மலை ஒன்று; அதன் மேல் பிறை சுடர் விடுகின்றது. அந்த மலையில் பச்சைப் பசேல் என்று ஒரு கொடி படருகிறது. அதன் இலையே மணக்கும். அதன் அருகில் சென்ருலே நறுமணப் வீசும். இவ்வாறு குன்றில் ஒன்றிப் பட்ரும் பரிமளப் பச்சைக் கொடியைக் கண்டு வியந்து தம்முடைய மனத்தில் பதித்துக்கொண்ட்வர் அபிராமிபட்டர்.

நம்முடைய நெஞ்சில் பிறவிதோறும் அடர்ந்திருக்கும் வாசனைகள் பல. புண்ணிய பாவ வினைகளை அநுபவித்துத் தீர்ப்பதற்காகப் பிறவி எடுக்கிருேம். ஆனால் ஒரு பக்கத்தில் பழைய வினைப்பயன்களை அநுபவித்துத் தீர்த்துக்கொண்டே இருக்கும்போது மற்ருெரு பக்கத்தில் புதிய செயல்களைச் செய்து புதிய புண்ணிய பாவங்களை ஈட்டுகிருேம், அதன் விளைவாக நம்முடைய பிறவித்தொடர் நீண்டுகொண்டே போகிறது. மனம் ஒவ்வொரு பிறவியிலும் வாசனைகளைத் தாங்கிப் பாறைபோல் இறு:கி நிற்கிறது. அநுபவித்துக் கழித்துவிடுவதோடு நில்லாமல் மேலும் மேலும் வாசனைகளை ஏற்றிக் கொண்டிருக்கிருேம். இதற்கு மாற்று என்ன?

பெரியவர்கள் நாம் புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிருர்கள். புண்ணியமும் பிறவிக்குக் காரணமானதே. அப்படியிருக்க அதை ஈட்டுவதனால் துன்ப மன்ருே நேரிடும்? நாம் பாவச் செயல்களையே மிகுதியாகச் செய்கிருேம். அவற்றை மாற்றுவதற்குப் புண்ணியச் செயல் களை மிகுதியாகச் செய்யவேண்டும். அளவற்ற புண்ணியம் செய்தவன் அதன் பயனகச் சொர்க்க பதவியை அடைந்து. பிறகு மோட்சத்தை அடைவான். அதிகமாகக் கடன்