பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவாப் பேறு - 175

வாங்கியவன் மிகுதியான பொருளை ஈட்டி அந்தக் கடனைத் தீர்ப்பது போன்றது. இது. கெட்ட வாசனைகள் மிகுதியான மனத்தில் அவற்றின் விளைவுகள் உண்டாகாமல் இருக்க நல்ல வாசனைகளை ஏற்ற வேண்டும். பெரியவர்களோடு பழகுதலும் நல்ல பழக்க வழக்கங்களே மேற்கொள்ளுதலும் ஆகியவற்ருல் நல்ல வாசனை படியும். இவற்றுக்கெல்லாம் மேலாக அம்பிகையின் திருவுருவத்தியானத்தால் உள்ளத் திலுள்ள அழுக்கு மாறி ஒளியும் ஞானமணமும் உண்டாகும். இதையே அபிராமிட்டர் சொல்ல வருகிரு.ர்.

எம்பெருமாட்டி பச்சைக் கொடியைப்போல இருக் கிருள். ராஜ ராஜேசுவரியின் வண்ணம் சிவப்பு ஆலுைம் சிவபெருமானோடு ஒன்றியிருக்கும்போது அவள் உமாதேவி யாகப் பச்சை வண்ணம் கொண்டவளாக விளங்குகிருள். மென்மையும், தன்மையும், அன்பர்களுக்கு வேண்டியபடி வளைந்து கொடுக்கும் நெளிவும் இருப்பதால் அவளைக் கொடி என்று கூறுவர். பச்சைக்கொடியாகிய பெருமாட்டி சிவபெருமானைச் சார்ந்து விளங்குகிருள். குன்றைப்போல் நிச்சலமாக இருக்கும் சிவளுேடு கொடியைப்போல் படர் கிருள். மலை உயரமாக இருந்தால் அதன் உச்சியிலே சந்திரன் தோன்றுவான். சிவபெருமானுடைய முடியிலும் கலைமதி விளங்குகிறது. பரமசிவனுடைய திருமுடியில் இருக்கும் பிறைக்கு ஒரு சிறப்பு உண்டு. வானத்தில் தோன்றும் சந்திரன் வளர்வதும் தேய்வதும் உடையவன். இறைவன் திருமுடியில் இருக்கும் பிறையோ அவ்விரண்டும் இல்லாமல் என்றும் தனக்குரிய கலைகளோடு ஒளிர்கிறது. சிவபெருமாளுகிய குன்றுக்குக் காடு அடர்ந்த சிகரத்தைப் போலச் சடை அடர்ந்த திருமுடி இருக்கிறது. அதன்மேல் கலைமதி சுடர்கிறது. இத்தகைய சிவபெருமாளுகிய குன்றத்தில் ஒன்றிப் படரும் பச்சைக்கொடியாக விளங்கு கிருள் எம்பெருமாட்டி. அவளுடைய திருமேனி நறுமணம்