பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மாலை பூண்ட மலர்

செய்த ஒருவனைச் சிவகணங்கள் அழைத்துச் சென்றன என்றும் படித்திருக்கிருேம். நல்லவர்களுடைய மரணமும் அல்லாதவர்களுடைய மரணமும் நம் கண்ணுக்கு ஒன்று போலவே தோற்றம் அளிக்கின்றன. உயிர் விடுவதற்குமுன் உடம்பில் உண்டாகும் நோய் முதலியவற்றை நாம் காண்கிருேம். உயிர் பிரிந்த பிறகு அது எத்தகைய நிலையை அடைகிறது என்பது நமக்குக் கண்கூடாகத் தெரிவதில்லை. ஆலுைம் சாஸ்திரங்களும் மெய்ஞ்ஞானியர்களும் அதுபற்றிச் சொல்லியிருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். -

இறப்பதற்கு முன்பு ஒருவனுடைய வாழ்வு எவ்வாறு அமைகிறதோ அதனுடைய தொடர்பாகவே இறப்பதற்குப் பின்பும் இருக்கும். இங்கே தீய குணங்களுக்கு எல்லாம் இடமாக இருப்பவன் இந்த உடம்பை விட்டவுடன் நல்லவன் ஆவதில்லை. மரணம் என்பது இந்தத் துரல சரீரத்தினின்றும் உயிர் பிரியும் அவஸ்தை. அதன் பிறகும் உயிருக்கு உடம்பு இருக்கிறது. சூட்சும சரீரம் என்றும், காரண சரீரமென்றும் கூறும் உடம்புகள் இரண்டோடும் அது சஞ்சாரம் செய்கிறது. இந்த உடம்பில் இருக்கும்போதும் அவை இருக்கின்றன. அப்போது பனியன், ஷர்ட், கோட்டுப் போட்டவனைப்போல உயிர் மூன்று உடம்புகளுடன் இருக்கிறது. மரணம் என்பது மேல் சட்டையைக் கழற்றுவது போன்றது. இந்த உடம்பு செயலற்றுக் கிடக்க நாம் தூங்கும்போது கனவு காண் கிருேம்; இன்ப துன்பங்களை அநுபவிப்பதாகக் கனவு காண் கி ருேம். அந்த அநுபவம் சூட்சும சரீரத்தில் விளைவது உடம்பை உயிர் விட்ட பின்பும் சூட்சும சரீரம் இருப்பதால் அதுவே இன்ப துன்பத்தை அநுபவிக்கிறது. இந்த உடம்பில் இருக்கும்போது சூட்சும சரீரம் என்று பெயர் பெறும் உடம்பே, மரணத்திற்குப் பின் யாதன