பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மாலை பூண்ட மலர்

கிடைக்கும் அநுபவங்களையே சொர்க்கம் நரகம் என்று சொல்கிருேம். சுகதுக்க அதுபவங்கள் வெளிப்படை யானவை. சொர்க்க நரக அநுபவம் சூட்சுமமானவை. இந்தப் பிறவியில் சுகதுக்கங்களை அநுபவித்து மேலும் சுகதுக்கங்களே அநுபவிப்பதற்கு விதை போன்ற புண்ணிய பாவ கர்மங்களைச் செய்கிறவர்கள் இந்தப் பிறவிக்குப் பிறகு இன்ப துன்ப அநுபவங்களைத் தொடர்ந்து அநுபவிக் கிர்ேகள். அப்படி அநுபவிக்கும் நிலையில் இருப்பவர்களை யமது தர்கள் கொண்டு போவதாகப் புராணங்கள் கூறும். இந்தப் பிறவியில் அழுக்கெல்லாம் நீங்கித் தூய நிலையில் இருந்து, இறைவன் திருவருளாகிய பலத்தைத் தேடிக் கொண்டவர்கள் மரணம் அடைந்தவுடன் இன்ப துன்பங் களுக்கு அப்பாற்பட்ட ஆனந்த நிலையை அடைகிரு.ர்கள், அத்தகையவர்களைச் சிவகனங்கள் அழைத்துச் செல் வதாகப் புராணங்கள் கூறும். அவர்களுக்கு யமவாதனே இல்லை.

இன்னும் விளக்கமாக ஒர் உதாரணம் சொல்லலாம். இறைவன் திருவருள் பெருதவர்களின் வாழ்க்கைப் பயணம் இன்னும் தொடர்ந்துகொண்டே செல்கிறது. இந்தப் பயணத்தில் ஒரு சிறையிலிருந்து மற்ருெரு சிறைக்குப் போகும் குற்றவாளியைப்போல் வேறு உடம்பில் புகுவார்கள். இந்தச் சிறை மாற்றத்தின் இடையே போலிஸ்காரர்களின் கட்டுக்காவலில் குற்றவாளிகள் இருப்பதுபோல, உயிரும் யமதூதர்களின் காப்புக்குள் அடங்கித் துன்பத்தைப் பெறும். இறைவன் திருவருள் பெற்றவர்களோ சிறையினின்றும் வெளிப்பட்டு அன்பர் கள் மாலையிட்டு அழைத்துச்செல்ல வீட்டுக்குப் போவ தைப்போல இனிப் பிறவாத நிலையைப் பெற்று மோட்ச வீட்டை அடைவார்கள். *