பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்! 17

கூர்மையாகுமேயன்றி உள்ளம் குழைவதில்லை. பல வகை யான நற்செயல்களைச் செய்பவர்களுக்கும் உள்ளம் எளிதில் உருகுவதில்லை. -

அன்னேயை நினைந்து உருகுவது அன்பிற்கு அடை யாளம்.

நினைந்துருகும் அடியார்’ ’

என்று அப்பர் சொல்வார். மனம் கல்லாக இருக்குமட்டும் நற்குணங்கள் அதில் ஏறுவதில்லை. நம்முடைய தாழ்ந்த நிலையை முதலில் எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ வேண்டும். பிறகு அன்னேயின் பேரருளுக்காக ஏங்கிக் கரையவேண்டும். இந்த உருக்கமே அன்புக்கு அடை

யாளம். - - - --

பிறவி இனி இல்லை என்ற சாத்திய நிலைக்கு முன் இருந்த சாதன நிலை உள்ளம் உருகும் அன்பு நிலை. அந்த நிலையும் நம்முடைய முயற்சியினலே வருவதன்று; இறைவியின் திருவருளே அதனே நம்மிடம் உண்டாக்கவேண்டும். அந்த நிலையை அம்மை என்னிடம் படைத்தாள்' என்கிரு.ர். - -

உள்ளம் உருகும் அன்பு படைத்தன: . ...கின் அருள் ஏதென்று சொல்லுவதே!

அன்பு என்பது உள்ளத்தில் உண்டாவது. அந்த உணர்ச்சி முறுகவேண்டுமானல் பலகாலும் அன்னையைப் பணிந்து வழிபடவேண்டும். பணக்காரர்களைப் பார்த்து அவர்கள் பெற்றுள்ள வசதிகளைக் கண்டு, நாமும் பணத்தைச் சம்பாதிக்கவேண்டும்’ என்ற எண்ணம் உண்டாகும். அவ்வாறே அன்னையை வணங்கி நலம் பெறும் பக்தர்களைக் கண்டு, நாமும் இந்த நிலையைப் பெறவேண்டும்’ என்ற எண்னம் எழவேண்டும். இறைவியைப் பணிந்து வழிபடுவதற்கே இந்தப் பிறவி

மாலை-2 -