பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மாலை பூண்ட மலர்

நாயகி நான்முகி காரா

யணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிகச்சு வாய்அகி மாலினி வாராகி சூலினி மாதங்கிளன் ருயகி யாதி உடையாள

சரணம் அரண்நமக்கே

(எல்லாவற்றுக்கும் தலைவி, நான்கு முகங்களை உடை யவள், நாராயணி கைத்தாமரையில் ஐந்து மலரம்புகளைத் தாங்கியவள், சம்புவின் மனைவி, சங்கரி, சாமளே, நஞ்சை வாயிலே உடைய நல்ல பாம்பை மாலையாக உடையவள், வாராகி. சூலினி, மாதங்கி என்று பலபடியாகக் கூறும் திருநாமங்களால் ஆகிய புகழை உடையவளாகிய அபிராமி யின் திருவடிகள் நமக்குப் பாதுகர்ப்பாகும். .

கியாதி - புகழ். சரணம் - திருவடி. அரண் - பாது காப்பு.1 -

எல்லோருக்கும் தலைவியாக நின்று, படைப்பு முதலிய தொழில்களைப் பிரமன் முதலிய உருவிலே நின்று நடத்தி, சிவபெருமாளுேடு ஒன்றி நின்று, தியானம் செய்வதற்கேற்ற வகையில் ஆயுதங்களையும் அங்கங்களையும் தாங்கிய உருவெடுத்து விளங்கும் அன்னை நம்மைப் பாதுகாப்பான் என்பது இதன் திரண்ட பொருள். -

அம்பிகையின் திருவடிகளே நமக்குப் பாதுகாப்பாக உதவுவன என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியின் 50-25 பாட்டு.