பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்! 19

வேலை செய்கிருர்' என்று சொல்கிருர்கள். காலையில் எழுந்தது முதல் இரவு வரையில் அவர் குமாஸ்தா வேலையையே செய்துவருகிருர் என்ரு நாம் நினைப்போம்? அலுவலகம் சென்று செய்யும் வேலே அது. ஆலுைம் அதைச் செய்வதற்கு வேண்டிய உடல் வலிமை, உள்ளத் தெளிவு, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதற்குரிய காரியங்களை மற்ற நேரங்களில் செய்கிருர். அவை யாவும் அவர் உத்தியோகம் பார்க்கிறதற்கு உபகாரமாக இருப்பவை. அவ்வாறே இறைவியைப் பணிந்து வழிபடும் உடம்புக்கு வேண்டியவற்றைச் செய்யும் காரியங்கள் அந்தப் பணிக்கு உபகாரப்படுவனவே ஆகும். புலன் நுகர்ச்சியையே பெரிதாக எண்ணி உடம்பைப் போற்றுவது மற்றவர்கள் செயல். பக்தர்களோ இந்த உடம்பு அன்னேயின் தொண்டைப் புரிவதற்கு வந்த கருவியென்று கருதி இதைப் பாதுகாப்பார்கள். அர்ச்சனை செய்வதற்காக மலர்களைப் பறிக்கிருர் பக்தர். ஒரு குடலையில் மலரைக் கொய்து போட்டுக்கொள்கிருர். அந்தக் குடலை பிய்ந்து போகாதபடி பார்த்துக்கொள்வது அவர் கடமை. அதுவும் அtச்சனைக்கு உதவுகிற காரியந்தான். நேர்முகமாக உதவா விட்டாலும் மறைமுகமாக உதவுகிறது. அவ்வண்ணமே இந்த உடம்பைப் பாதுகாப்பதும், அன்னேயின் வழி பாட்டுக்கு அங்கமான செயலே. இப்படிப் பார்த்தால் பக்தர்கள் எது செய்தாலும் அது அன்னையின் வழி பாட்டுக்கு ஏதேனும் ஒரு வகையில் உபகாரப்படுவ தாகவே அமையும். அதை நினைந்தே, உன் திருவடியைப் பணிவதாகிய வேலையையே எனக்கு நியமித்தாய் என்று. ஏகாரம் போட்டுச் சொன்னர். அது பிரிநிலை ஏகாரம். வேறு வேலை ஏதும் இல்லை என்பதைக் குறிக்க வந்தது

அது : -

இறைவியை வழிபட்டு வழிபட்டு உள்ளத்தே உருகும் அன்பு உண்டாகி முறுகி, ஜீவபோதம் கழன்று இனிப்