பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மையும் மறுமையும்

தமக்குப் படிப்படியாக நிலை உயரும்படி அருள் செய்த அம்பிகையின் பெருங்கருணையை நினைந்து வியப் ப்டைந்த ஆசிரியர், பொதுவாக யார் அன்னையைப் புகலடைந்தாலும் அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் படிப்படியே நன்மை உண்டாகும் என்று சொல்ல

முதலில் அம்பிகையைத் துதிக்கிரு.ர். எம்பெருமாட்டி சிவபெருமானுடன் இணைந்து விளங்குகிருள். சொல்லும் பொருளும் இணைந்ததுபோல் பிரிவின்றி இணைந்து நிற்கிருர் கள் இருவரும். அன்னை சொல்வடிவாக இருப்பவளென்றும், சிவபெருமான் அதன் பொருள் வடிவாக இருப்பவன் என்றும் காளிதாஸன் முதலிய மகாகவிகள் கூறுகிருர்கள். "சொல்வடிவாய்நின் இடம்பிரியா இமயப் பாவை,

தன்னையும்சொற் பொருளான உன்னையுமே' .

-இடைக்காடன் பிணக்குத் தீர்த்தபடலம், ! என்பது திருவிளையாடற் புராணம். இறைவியும் இறைவனும் ஒன்றி நிற்கும் கோலத்தை அபிராமிபட்டர் நினைக்கிருர். х

சொல்லும் பொருளும் என நடமாடும்

துணைவருடன் - புல்லும் பரிமளப் பூங்கொடியே! அம்பிகை சொல்வடிவாக இருக்கிருள்: வாயிலிருந்து .

வரும் சொற்கள் யாவும் அவள் அருளால் வருவன; அவளே அந்த மயமாக விளங்குகிருள். வாக்வாதினி (350).