பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரையேற்றும் உமையவள்

சுந்தரமூர்த்தி நாயனர் இறைவனுக்குத் தொண்டு புரியும் ஆலால சுந்தர்ரின் அவதாரம். அவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தபோது இறைவன் கிழவேதியராக எழுந்தருளி, நீ என் அடிமை' என்ருன் . சுந்தரர் அதை மறுத்தார். இறைவன் ஆவண ஒலை காட்டித் தான் சொல்லியதை மெய்யென்று நிரூபித்தான். சுந்தரர் தொடர்ந்து சென்றபோது அந்தணளுக வந்தவன் மறைந்து பிறகு விடையின்மேல் உமாதேவியுடன் காட்சி கொடுத் தருளினுன். அப்போது உண்மையை உணர்ந்த சுந்தரர், * எம்பெருமானே, நான் உனக்கு ஆளானவன். என்றும் உன் அடிமை. அப்படி இருக்க நான் ஆள் அல்ல் என்று சொல்லலாமா?’ என்று உருகிப் பாடினர்.

அத்தாஉனக் காளாய்இனி அல்லேன் என லாமே?”

என்று ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வரும்படி ஒரு பதிகமே பாடினர். அடிமையாக இருப்பவன் தன் தலைவ னிடம், நான் உமக்கு ஆள் அல்ல' என்று சொன்னலும் அந்த வார்த்தை செல்லாது என்பதை அந்த வரலாறு உணர்த்துகிறது. -

அதற்கு எதிரான ஒன்றை அபிராமிபட்டர் சொல்ல வருகிருர். அம்பிகையின் பெருமையைப் பாடிக்கொண்டு. வந்தவர் தமக்கும் எம்பெருமாட்டிக்கும் உள்ள உறவை எண்ணிப் பார்க்கிருர். உலகியலில் ஈடுபட்டு வாழ்ந்த அவரை அன்னை கருணை மிகுதியால் தடுத்து ஆண்டு. கொண்டு தன்னுடைய 'பத்ம பத யுகம்குடும் பணியை’ அவருக்கு அமைத்தாள். நெஞ்சத்து அழுக்கை யெல்லாம்